விடுதலைப் புலிகள் முஸ்லிம்களை ஏன் , எப்போது புறக்கணித்தார்கள் தெரியுமா…

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் முஸ்லிம் இனத்தவர்களும் இணைந்து தம்முயிரை நீர்த்தவர்கள் என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை. இருப்பினும்

1990 ஆண்டிற்கு பிறகுதான் முஸ்லீம்களுக்கு எதிராக புலிகள் போராட ஆரம்பித்தார்கள். அதற்கான காரணம் காட்டிக்கொடுப்பும் கூட்டிக்கொடுப்பும்.

20.06.1990 வீரமுனை பிள்ளையார் கோவில் படுகொலை அதிரடிப்படை மற்றும் முஸ்லீம்களால் 69 தமிழர்கள் படுகொலை

05.07.1990 வீரமுனையில் 13 தமிழர்கள் படுகொலை

10.07.1990 வீரமுனையில் 15 தமிழர்கள் படுகொலை .

16.07.1990 மல்வத்தை இராணுவத்தினரும் முஸ்லீம் ஊர்காவல்படையினருமாக சுமார் 30 பேர் சேர்ந்து 8 பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை செய்தனர்.

26.07.1990 வீரமுனையில் 23 சிறுவர்கள் உட்பட 32 இளைஞர்கள் முஸ்லீம்ஊர்காவல்படையினராலும் விசேட அதிரடிப்படையினராலும் கைது செய்யப்பட்டு காணாமல் போயினர்.

29.07.1990 8 ஆசிரியர்கள் குடும்பத்துடன் பஸ் ஒன்றில் வீரமுனையை விட்டு வெளியேறிக்கொண்டிருந்த போது அவர்கள் அனைவரும் கடத்தி செல்லப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர்.

01.08.1990 சவளக்கடையில் 18பேர் கைது செய்யப்பட்டு காணாமல் போயினர்.

12.08.1990 வீரமுனை அகதிமுகாமில் புகுந்த முஸ்லீம் குழு வாள்களால் வெட்டி தாக்குதல் நடத்தியது. இதில் ஆலய பரிபாலனசபை தலைவர் தம்பிமுத்து சின்னத்துரை உட்பட 14பேர் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர். வீரமுனையில் 600வீடுகளும், சம்மாந்துறை, மல்லிகைத்தீவு, வளத்தாப்பிட்டி கணபதிபுரம், மல்வத்தை ஆகிய கிராமங்களில் இருந்த 1352 தமிழர்களின் வீடுகள் முஸ்லீம்களால் முற்றாக தீக்கிரையாக்கப்பட்டது.

20.06.1990க்கும் 15.08.1990க்கும் இடைப்பட்ட காலத்தில் வீரமுனையில் மட்டும் 232 பொதுமக்கள் கொல்லப்பட்டதுடன் 1600க்கு மேற்பட்ட வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டது. இதனை முன்னின்று செய்தவர்கள் அயல்கிராமமான சம்மாந்துறையை சேர்ந்த முஸ்லீம்களே.

இவ்வாறான மன்னிக்கமுடியாத செயல்களாலேயே விடுதலைப் புலிகளால் முஸ்லீம் இனத்தவர் புறக்கணிக்கப்பட்டனர்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like