மனைவியை 12 முறை கத்தியால்குத்திக் கொலை செய்த கணவர்! யாழில் கொடூரம்

கணவனின் கத்திக்குத்துக்கு இலக்காகிப் படுகாயமடைந்த மனைவி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுச் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் யாழ்ப்பாணம், குருநகரில் இடம்பெற்றது.

கணவரால் 12 இடங்களில் கத்திக்குத்துக்கு இலக்கான மனைவி இன்று பிற்பகல் யாழ். போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார்.

எனினும் கழுத்து, நெஞ்சு என 12 இடங்களில் கத்திக்குத்து ஆழமாகப் பதிந்திருந்ததால் அவருக்கு அதிகளவு குருதி வெளியேறியது.

அதனால் அவர் உயிரிழந்தார் என்று வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவித்தன. இவ்வாறு உயிரிழந்தவர் 3 பிள்ளைகளின் தாயார் என்று தெரிவிக்கப்பட்டது.

குடும்பத்தகராறு காரணமாக மனைவி மீது கணவன் இந்தக் கொடூரத்தைப் புரிந்துள்ளார் எனத் தெரியவந்துள்ளது. சம்பவத்தையடுத்து கணவர் தலைமறைவாகியுள்ளார்.

மனைவியின் சடலம் தற்போது யாழ். போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like