தமிழ் இளைஞனுக்கு 60 லட்சம் சம்பளத்தில் கிடைத்துள்ள வேலை!

தமிழ் இளைஞன் ஒருவர் ரூ 60 லட்சம் சம்பளத்தில் வேலைக்கு சேரவுள்ளமை தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளது.

சென்னையை சேர்ந்த 22 வயது ஷயாம் என்ற இளைஞருக்கே இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது.

லண்டனில் உள்ள பேஸ்புக் நிறுவனத்தில் பயிற்சி எடுத்த நிலையில் கூகுள் நிறுவனத்தில் ரூ 60 லட்சம் சம்பளத்தில் வேலைக்கு சேரவுள்ளார்.

இது தொடர்பில் மேலும் அறிய முடிவதாவது,

ஷயாம் என்ற இளைஞர் பெங்களூரில் உள்ள International Institute of Information Technology கல்லூரியில் I-Mtech என்கிற இரட்டைப் பட்டப் படிப்பைப் படித்துள்ளார்.

பின்னர் கூகுள் நிறுவனத்தில் வேலைக்கு விண்ணப்பித்த பிறகு அங்கு ஓன்லைனில் நேர்காணல் நடத்தி இருக்கிறார்கள்.

அதில் தேறியவர்களை, ஜேர்மனியில் உள்ள முனிச் நகரில் ஒரு நேர்காணல் நடத்தி இருக்கிறார்கள். அதில் எல்லாம் தேறிய பிறகு தான் இப்போது கூகுள், ஷியாமை வேலைக்கு அழைத்திருக்கிறது.

அது மட்டுமின்றி, ஷியாம் கடந்த 2018-ல் லண்டனில் உள்ள ஃபேஸ்புக் நிறுவனத்தில் பயிற்சி எடுத்திருக்கிறார்.

ஷியாம் வரும் அக்டோபர் மாதம் போலாந்தில் உள்ள கூகுள் அலுவலகத்தில் வேலைக்கு சேரப் போகிறார்.

இவருக்கு மாதம் ஐந்து லட்சம் ரூபாய் சம்பளம், அதாவது ஆண்டுக்கு 60 லட்சம் ரூபாய் சம்பளமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like