இன்று சில மணிநேரங்கள் இருளில் மூழ்கவுள்ள நாடுகள்! இரு வருடங்களின் பின் இடம்பெறும் அரிய நிகழ்வு

2017ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதத்தின் பின்னர் இன்றைய தினம் பல நாடுகளில் பூரண சூரிய கிரகணம் தென்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயத்தை நாசா ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளதுடன், பசுபிக் பெருங்கடல், சிலி மற்றும் ஆர்ஜென்டினா ஆகிய நாடுகளுக்கு இந்த சூரிய கிரகணம் நம் நாட்டு நேரப்படி இரவு 10:24 மணிக்கு தெளிவாக தென்படும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதனால் தெற்கு பசிபிக் நாடுகள் சில மணி நேரங்களுக்கு இருளில் மூழ்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் சிலி நாட்டின், லா செரீனா எனும் இடத்தில் அந்த நாட்டு நேரப்படி மதியம் 3:22 மணி முதல் மாலை 5:46 மணி வரை கிரகணம் தென்படும்.

எனினும் முழுமையான சூரிய கிரகணமானது மொத்தமாக 4 நிமிடங்கள் 33 வினாடிகளுக்கு மட்டுமே நீடிக்கும் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

ஆன்லைன் மற்றும் தொலைக்காட்சிகள் வழியே கிரகணத்தை கண்டு ரசிக்கவும் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அதேவேளை சூரிய கிரகணம் என்பது, சூரியனின் ஒளிக்கதிர்களை சந்திரன் மறைக்கும் அரிய நிகழ்வே ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.