ஜூலை மாத ராசி பலன்கள் : எந்த ராசியினருக்கு அதிர்ஷ்டம் பெருக போகுது?

2019 ஆ‌ம் ஆ‌ண்டு ஜூலை மாத‌த்‌தி‌ற்கான ஜோ‌திட‌ப் பல‌ன்களை பற்றி பார்போம்.

மேஷம்
குடும்பத்தில் கணவன் மனைவியிடையே ஒற்றுமை ஏற்படும். திருமண வயதில் இருக்கும் ஆண் மற்றும் பெண்களுக்கு நல்ல வரன்கள் அமையும். உடலாரோக்கியத்தில் சிறிது கவனம் செலுத்த வேண்டும். பிறருடன் பேசும் போது வார்த்தைகளில் கவனம் தேவை.

தன வரவுகள் தாராளமாக இருக்கும் உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு பதவி உயர்வுகள் கிடைக்க வாய்ப்புண்டு. புதிய முயற்சிகளில் ஈடுபடுபவர்களுக்கு சற்றுக்கு தாமதத்திற்கு பின்பு வெற்றி கிட்டும். பொது வாழ்வில் இருப்பவர்கள் மக்களின் பாராட்டுக்கள் கிடைக்க பெறுவார்கள்.

கடன்கள் அனைத்தையும் முழுவதுமாக அடைத்து முடிப்பீர்கள். பெண்கள் உடல் நலத்தில் அக்கறை செலுத்த வேண்டும்.

ரிஷபம்
நீங்கள் புதிதாக தொடங்கும் எத்தகைய முயற்சிகளிலும் வெற்றி கிட்டும். குடும்பத்திலுள்ள பெரியவர்களுடன் மனஸ்தாபம் ஏற்படலாம்.

பெண்கள் வகையில் குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். அடிக்கடி பயணங்களும் தீர்த்த யாத்திரைகளையும் மேற்கொள்வீர்கள். கலைஞர்கள் அவர்களுக்குண்டான வாய்ப்பை பெறுவார்கள். பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

சில பெரிய மனிதர்களின் தொடர்பு நன்மையை தரும். பணம் கொடுக்கல் வாங்கலில் ஈடுபடுபவர்களுக்கு கடன் கொடுத்த தொகையை சற்று இழுபறியாக இருந்து பிறகு கிடைக்கும்.

நீதிமன்ற வழக்குகளில் தாமதங்கள் ஏற்பட்டாலும் வழக்கு உங்களுக்கு சாதகமாக முடியும். உங்கள் தொழில், வியாபாரங்களை பெரிய அளவு லாபங்கள் இல்லையென்றாலும் நஷ்டங்கள் ஏற்படாது.

மிதுனம்
உடல்நலத்தில் சிறிது குறைபாடு இருந்தாலும் உங்கள் மனம் மட்டும் உடல் உற்சாகத்துடன் இருக்கும். பிறருக்கு நீங்கள் கொடுத்த கடன்கள் சற்று தாமதமானாலும் வட்டியுடன் வந்து சேரும். உறவினர்களுடன் சற்று விட்டுக்கொடுத்து செல்வது அனைவருக்கும் நன்மையை தரும்.

ஈடுபடும் முயற்சிகள் அனைத்தும் சிறப்பாக நடந்து முடியும். புதிய பணியிலிருப்பவர்கள் அந்த பணியிலே சில காலம் தொடர்வது நல்லது.

வீட்டிலும் வெளியிடத்திலும் வீண் விவாதங்களை தவிர்க்க வேண்டும். தொழில் மற்றும் வியாபாரங்களில் சுமாரான வருவாயே இருக்கும். அரசியலிலிருப்பவர்கள் எதையும் சற்று அனுசரித்து செல்ல வேண்டும்.

கடகம்
உடலில் அவ்வப்போது நோய்கள் ஏற்பட்டு நீங்கியவாறு இருக்கும். பெற்றோர்கள் வழியில் சிலருக்கு மருத்துவ செலவுகள் ஏற்படும். சிலருக்கு ஆன்மீக பயணங்கள் மேற்கொள்ளும் சூழ்நிலை உருவாகும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் சராசரியான லாபங்களை பெறுவார்கள்.

உங்கள் வீட்டில் நீண்ட நாட்களாக தாமதமான சுபநிகழ்ச்சிகள் சீக்கிரத்திலேயே நடக்கத்தொடங்கும். திருமண வயது வந்த உங்கள் வீட்டு ஆண்கள், பெண்களுக்கு சிறப்பான முறையில் திருமணம் நடைபெறும்.

புதிய முயற்சிகளில் ஈடுபட்டிருப்பவர்கள் சற்று தாமதித்து அம்முயற்சிகளை தொடங்குவது நல்லது. புதிய ஆடை மற்றும் ஆபரண சேர்க்கை உண்டாகும்.

சிம்மம்
கூடுதலான உழைப்பை தர வேண்டியிருப்பதால் உடல் மற்றும் மனதில் அசதி உண்டாகும். வெளியூர் வெளிநாடுகளில் இருந்து நல்ல செய்திகள் வரப்பெறும்.

திருமண வயதுள்ள பெண்களுக்கு சிறந்த வரன்கள் அமைய பெறும். உறவினர்கள் உங்களை தேடி வந்து உதவி கேட்கும் நிலை உண்டாகும்.

கொடுக்கல் வாங்கல் சீராக இருக்கும். பணியிடங்களில் உயரதிகாரிகளை அனுசரித்து செல்வதால் நன்மைகள் உண்டாகும். குழந்தைகள் கல்வியில் சாதனைகளைச் செய்யக்கூடும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் எதிலும் விட்டுக்கொடுத்துச் செல்வது நலம்.

பணிபுரிபவர்கள் தாங்கள் எதிர்பார்த்த பதவிஉயர்வுகள், ஊதிய உயர்வுகளைப் பெறுவார்கள். புதிய சொத்துக்கள் வாங்கும் யோகம் ஏற்படும். வெளிநாடுகள் செல்லக்கூடிய சூழலும் உண்டாகும்.

கன்னி
உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். மறைமுக எதிர்ப்புகள் நீங்கி உங்களுக்கு அனைத்திலும் நன்மைகள் உண்டாகும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும்.

ஒரு சிலர் புதிய சொத்துகள் வாங்கும் அமைப்பும் உருவாகும். குடும்பத்தேவைகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்படும்.

உங்களுக்கு வரவேண்டிய பண வரவுகளால் உங்கள் குடும்பத்திற்குத் தேவையான அனைத்தையும் வாங்கி மகிழ்வீர்கள்.

வாங்கிய கடன்களை முழுமையாக அடைப்பீர்கள். கணவன் மனைவி ஒற்றுமை மேலோங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி மேலோங்கும். சமுதாயத்தால் மதிக்கப்படும் நிலை உண்டாகும். பிரிந்து சென்ற உறவுகள் மீண்டும் ஒன்றிணைவார்கள்.

துலாம்
புதிய வீடு, நிலம் வாங்குவதில் இருக்கும் பிரச்சனைகள் தீரும். உடன் பணிபுரிபவர்களிடம் சற்று எச்சரிக்கையாக இருப்பது நல்லது. உத்தியோகங்களில் ஊதிய உயர்வு மற்றும் பதவி உயர்வு கிடைக்கும். உங்களின் தொழில் வியாபார போட்டியாளர்களின் மறைமுக எதிர்ப்புகள் நீங்கும்.

பிரிந்து வாழ்ந்த தம்பதிகள் மீண்டும் ஒன்று சேர்ந்து வாழும் சூழல் உண்டாகும். பெண்களுக்கு நல்ல வரன்கள் அமையும். குடும்பத்தில் சுபச்செலவுகள் ஏற்படும்.

சிலருக்கு புத்திர பேறு கிட்டும். உடல்நலத்தில் அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும். புதிய முயற்சிகளில் வெற்றிகளும், லாபங்களும் உண்டாகும்.

விருச்சகம்
உடலாரோக்கியம் அவ்வப்போது ஏற்பட்டு நீங்கும். பொருள்வரவில் எந்த ஒரு பாதிப்புகளும் இருக்காது. ஆன்மீக, தெய்வீக காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். பிரிந்து சென்ற உறவினர்களும் உங்களிடம் வழிய வந்து சொந்தம் கொண்டாடுவார்கள். நண்பர்களால் ஆதாயம் உண்டாகும்.

பல புனித தலங்களுக்கு யாத்திரைகளை மேற்கொள்வீர்கள். தொழில், வியாபாரங்களில் நல்ல லாபம் ஏற்படும். வெளிநாடுகளுக்கு சென்று பெயரும், புகழும் பெரும் யோகம் கலைஞர்களுக்கு உண்டாகும். பெண்களின் உடல் நிலை நன்றாக இருக்கும்.

பிறருக்கு பணம் கடன் கொடுப்பதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். எந்த ஒரு விடயமும் சற்று தாமதத்திற்கு பின்பே நிறைவேறும். வாகனங்களில் பயணிக்கும் போது எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம்.

தனுசு
உடல் நிலை நன்றாக இருக்கும். உங்களுக்கு எல்லாவற்றிலும் இதுவரை இருந்த தடைகளும், தாமதங்களும் நீங்கும். உங்களின் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்து கொள்வீர்கள். அவ்வப்போது சுப நிகழ்ச்சிகளுக்கு சென்று வருவீர்கள்.

வேலைவாய்ப்பு தேடி அலைந்தவர்களுக்கு அவர்களின் தகுதிக்கேற்ற வேலை கிடைக்கும். வெளிநாடுகள் செல்வது சம்பந்தமான முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும். தொழில் வியாபாரங்களில் நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும்.

பெருந்தொகையை முதலீடாக போட்டு செய்யும் வியாபாரங்கள் நல்ல லாபத்தை கொடுக்கும். ஊழியர்களுக்கு அவர்கள் எதிர்பார்த்த பதவியுயர்வுகளும், ஊதிய உயர்வுகளும் கிடைக்கும். உங்களுக்கு வரவேண்டிய பணவரவுகள் வட்டியுடன் வந்து சேரும்.

மகரம்
உங்களுக்கு உடலில் உஷ்ண சம்பந்தமான குறைபாடுகள் ஏற்படும். அசையா சொத்துக்களை வாங்கும் யோகம் உண்டாகும். வாங்கிய கடன்கள் அனைத்தையும் கட்டி முடிப்பீர்கள்.

உத்தியோகிஸ்தர்களுக்கு விரும்பிய பணியிட மாறுதல்கள் கிடைக்கும். திருமணம் நடக்காதவர்களுக்கு திருமணம் நடக்கும்.

பிறருக்கு கடன் வழங்குவதை தவிர்க்க வேண்டும். நீங்கள் எதிர்பாரா உதவிகள் உங்களுக்கு தக்க சமயத்தில் கிடைக்கும். எடுக்கும் அத்தனை முயற்சிகளும் தடை ஏற்படாமல் வெற்றி பெறும். புனித யாத்திரையை சிலர் மேற்கொள்வீர்கள். அவ்வப்போது மனம் சற்று குழப்ப நிலையில் இருக்கும்.

கும்பம்
உடல் நலக் குறைவுகள் அடிக்கடி ஏற்பட்டு நீங்கும். குடும்பத்தில் குழந்தைகள் வழியில் மகிழ்ச்சி உண்டாகும். உற்றார் உறவினர்களிடையே மதிப்பு ஏற்படும்.

பிறருடனான பணம் கொடுக்கல் வாங்கல்களில் பெரிய தொகைகளை ஈடுபடுத் தாமல் இருப்பது நல்லது. தொலை தூர பயணங்களால் அதிகம் அனுகூலங்கள் எதுவும் இருக்காது.

பிரிந்த தம்பதிகள் ஒன்று சேர்வார்கள். புதிய ஆடை மற்றும் ஆபரண சேர்க்கை உண்டாகும். தொழில்களில் நல்ல லாபம் ஏற்படும். ஒரு சிலருக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஏற்படும். மாணவர்கள் கல்வியில் சிறப்பார்கள்.

மீனம்
உடல் நலக் குறைவுகள் அடிக்கடி ஏற்பட்டு நீங்கும். வீட்டில் சுப காரியங்களுகான செலவுகள் அதிகரிக்கும். உடல் நலத்தில் பாதிப்புகள் ஏற்பட்டு நீங்கும்.

பிறருடன் பேசும் போது கனமுடன் பேச வேண்டும். பணவரவு தாராளமாக இருக்கும். கடன்கள் அனைத்தையும் கட்டி தீர்ப்பீர்கள்.

கொடுத்த கடன்களை வசூலிப்பதில் ஒரு சிலருக்கு தாமதங்கள் உண்டாகும். மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வம் அதிகரித்து நன்றாக படித்து சிறந்த மதிப்பெண்களை பெறுவார்கள்.

கலைஞர்கள் நல்ல செல்வத்தையும், புகழையும் ஈட்டுவார்கள். அ. குடும்பத்தில் குழந்தைகள் வழியில் மகிழ்ச்சி உண்டாகும். உற்றார் உறவினர்களிடையே மதிப்பு ஏற்படும்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like