இலங்கையை உலுக்கிய சகோதரர்களின் படுகொலை! பிரித்தானியாவிலிருந்து ஹோட்டலிற்கு சென்ற இளைஞர்

இலங்கையில் உயிர்த்தஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற குண்டுவெடிப்பில் தனது சகோதரனையும் சகோதரியையும் இழந்த பிரிட்டனை சேர்ந்த இளைஞர் தனது சகோதரங்கள் தங்கியிருந்த இலங்கை ஹோட்டலிற்கு செல்லப்போவதாக தெரிவித்துள்ளார்.

டேவிட் லின்சே என்ற பிரித்தானிய இளைஞரே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இவர் தனது சகோதரன் டானியல் லின்சேயையும் சகோதரி அமெலியையும் இலங்கையில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் இழந்துள்ளார்.

தனது தந்தையும் சகோதரர்களும் இலங்கை சென்றதாகவும் எனினும் பல்கலைகழக பரீட்சை காரணமாக தான் இலங்கை செல்லவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நான் இலங்கை சென்று அவர்கள் கொல்லப்பட்ட ஹோட்டலிற்கு செல்லப்போகின்றேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனது பெற்றோர் முதலில் இதனை ஏற்க மறுத்தனர் ஆனால் தற்போது அவர்கள் இதற்கு அனுமதித்துள்ளனர் இது எனக்கு எவ்வளவு முக்கியமானது என அவர்கள் உணர்ந்துகொண்டுள்ளனர் என டேவிட் லின்சே தெரிவித்துள்ளார்.

அங்கு சென்றவுடன் நான் எப்படி நடந்துகொள்வேன் என சொல்லதெரியவில்லை,ஆனால் அவர்கள் கொல்லப்பட்ட இடத்தில் அஞ்சலி செலுத்தவேண்டும் என நினைக்கின்றேன்,அப்படி செய்யாவிட்டால் எனது மனோநிலையில் அது பாதிப்பை ஏற்படுத்தும் என அவர் தெரிவித்துள்ளார்,

எனது மன அழுத்தத்தை குறைப்பதற்காக நான் இலங்கை செல்லப்போகின்றேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைக்கு திரும்புவதற்கு முன்னர் சங்கிரி- லா ஹோட்டலில் காலை உணவருந்திக்கொண்டவேளையே தனது சகோதரங்கள் கொல்லப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

எனினும் குண்டுவெடிப்பு இடம்பெற்ற இடத்திலிருந்து தனது தந்தை தொலைவிலிருந்ததால் அவர் உயிர்தப்பிவிட்டார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தனது சகோதரங்கள் கொல்லப்பட்ட அடுத்த சில நாட்களில் அவர்களின் பெயரால் தான் தர்மஸ்தாபனமொன்றை ஏற்படுத்தியுள்ளதாகவும் இலங்கையில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் தனது சகோhதரங்களிற்கு மருத்துவ சிகிச்ளை அளித்த மருத்துவமனை ஆகியவற்றிற்கு உதவுவதே தனது நோக்கம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பிட்ட மருத்துவனை குண்டுவெடிப்பின் பின்னர் சிகிச்சை அளிப்பதில் சிரமத்தை எதிர்கொண்டது என குறிப்பிட்டுள்ள டேவிட் லின்சே ஏற்கனவே தான் மருத்துவமனையின் தேவை குறித்து மதிப்பிடுவதற்கு அமெரிக்காவிலிருந்து நிபுணர்கள் குழுவை அமர்த்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மருத்துமனையில் ஒரே குழப்பநிலை காணப்பட்டது என எனது அப்பா தெரிவித்தார்,மருத்துவமனையில் குண்டுவெடிப்பிற்கு சிகிச்சை அளிப்பதற்கான திறன் இருக்கவில்லை எனவும் லின்சே தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தவர்களை சந்திக்க விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அவர்கள் நிச்சயமாக துயரத்தில் சிக்குண்டுள்ளனர்,நான் அவர்களிற்கு வாழ்வதற்கான இடமும் கல்வியும் உளவியல் ஆற்றுகையும் கிடைப்பதை உறுதிசெய்யப்போகி;ன்றேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like