படையெடுக்கும் தமிழ் இளைஞர்கள்! குவிக்கப்படும் பொலிசார்!! என்ன நடக்கப்பபோகின்றது முல்லைத்தீவில்?

தமிழர் பிரதேசங்களை சிங்கள மயமாக்கும் இரகசியத்திட்ட நோக்கத்துடன் பௌத்த தேரர்களினால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் முல்லைத்தீவு – பழைய செம்மலைஇ நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தின் இருப்பையும்இ தமிழர்களின் நிலவுரிமையையும் உறுதிப்படுத்தி ஆலயத்திற்கான தமிழ் மக்களின் ஆதரவுப் பலத்தினை ஆக்கிரமிப்பாளர்களுக்கு காண்பிக்கும் முகமாக “தமிழர் திருவிழா” எனும் தொனிப்பொருளில் நாளை (06) அதே ஆலயத்தில் 108 பானைகளை வைத்து பொங்கல் விழாவை முன்னெடுக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி அன்றைய தினம் சிங்கள பௌத்த மயமாக்கலினால் பறிபோய்கொண்டிருக்கும் எல்லைக் கிராமமான கொக்குத் தொடுவாயின் வரலாற்று சிறப்புமிக்க கோட்டைக்கேணி பிள்ளையார் ஆலயத்தில் இருந்து செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்திற்கு பாரம்பரிய மடப்பண்டமெடுத்தலும் “108” பானைப் பொங்கலும் இடம்பெறவுள்ளது.

இதற்கான பேருந்து ஒழுங்குகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளார்கள்.

யாழ்ப்பாணம் மாவட்டத்திற்கான பேருந்துகளில் ஒன்று தெல்லிப்பளை – துர்க்கை அம்மன் ஆலயத்தடியில் இருந்து காலை 6.30 மணிக்கு காங்கேசன்துறை வீதியூடாக யாழ்ப்பாணம் பேருந்து நிலையம் சென்று அங்கிருந்து சாவகச்சேரி, கொடிகாமம் பேருந்து நிலையங்களில் நின்று முல்லைத்தீவிற்கு செல்லும் அதேவேளை மற்றுமொரு பேருந்து யாழ் பேருந்து நிலையத்தில் இருந்து காலை 6.30 மணிக்கு புறப்பட்டு யாழ் பல்கலைக்கழகம் சென்று அங்கிருந்து பருத்தித்துறை வீதியூடாக நெல்லியடி, கொடிகாமம் சென்று புதுக்காடு சந்தி வழியாக முல்லைக்கு செல்கிறது.

தொடர்பு: ராஜஸ்ரீ – 0772124654.

திருகோணமலை – சிவன்கோவிலடியில் இருந்து காலை 6.30 மணிக்கு நிலாவெளி திரியாய் ஊடாக முல்லைக்கு செல்லும். தொடர்பு: விவேகானந்தன் – 0773770215.

வவுனியா – பழைய பேருந்து நிலையத்தில் இருந்து காலை 6.30 மணிக்கு புறப்பட்டு முல்லைக்கு செல்கின்றது. தொடர்பு: பிரணவன் – 0776084108.

மன்னார் – வண்ணாங்குளம் பகுதியில் இருந்து காலை 6.00 மணிக்கு திருக்கேதீஸ்வர சந்தியூடாக ஏ-32 சாலை சென்று மாங்குளம் ஊடாக முல்லையை சென்றடையும். தொடர்பு: தீபன் – 0770771236.

கிளிநொச்சி – டிப்போச் சந்தியில் இருந்து பரந்தன், விசுவமடு, தேவிபுரம் ஊடாக புதுக்குடியிருப்பு சென்று முல்லைக்கு பயணிக்கும். தொடர்பு: துஷாந்த் – 0772479023.

அதேவேளை, குறிப்பிட்ட இந்த ஸ்தலத்திற்கு பௌத்த பிக்குகளும் நாளைய தினம் பெருமளவில் வர இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன. இதனால் பொலிஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளும் அங்கு மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இங்குள்ள நிலவரம் பற்றி முன்நாள் மாகாணசபை உறுப்பினர் ரவிகரன் அவர்கள் கூறிய கருத்து இது: