யாழில் வரும்காலத்தில் 5 மாதச் சிசு கூட கருவிலே அழிந்துவிடும் பேராபத்து! மருத்துவர்கள் எச்சரிக்கை

யாழில் நிறுவப்பட்டுவரும் ஸ்மார்ட்செலூலர் கோபுரங்களின் செயற்பாட்டை விரைவுபடுத்தி 5ஜி தொழில்நுட்பம்பயன்படுத்தப்படுமாயின் கருவில் உள்ள 5 மாதச் சிசு கூட அழிந்துவிடும் என மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

யாழ்.நகர சபையால்அதன் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தொழிநுட்பசேவையை விரிவுபடுத்தும் நோக்கில் தனியார் நிறுவனம் ஒன்றினூடாக குறித்த தொலைத் தொடர்புக் கோபுரங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

குறித்த நவீனதொழிநுட்பத்துடன் கூடிய கோபுரங்களில் தொழிநுட்பச் சேவை தொடர்பாக மாநகர சபை உறுப்பினர்களுக்கோ தெளிவான விளக்கம் இல்லை என பொதுமக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

யாழ் மாநகரசபையால் அதன் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தொலைத் தொடர்பு சேவையை நவீனப்படுத்த குறித்த தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கும்போது மக்களிடமோ சுகாதாரத்துறை மற்றும் சிவில் அமைப்புகளுக்கு குறித்த திட்டம் தொடர்பில் தெளிவுபடுத்தப்படாமல் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்துடன் மக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள பிரதேசங்களில் குறித்த தொலைத்தொடர்புக் கோபுரங்கள் நிறுவப்பட்டு வருகின்றது.

இதனூடாக குறித்த நிறுவனம் துணை நிறுவன சேவையை விரிவுபடுத்தும் நோக்கில் 5ஜி தொழில்நுட்பம் பிரயோகிக்கப்பட்டால் அதனூடாக வெளியேற்றப்படும் கதிர்வீச்சுக்கள் மனித மற்றும் விலங்குகளின் உடலில் பாரிய தாக்கங்களை ஏற்படுத்தும்.

இதேவேளை உலகில் அபிவிருத்தி அடைந்த நாடுகளில் கூட அனுமதிகாத , பரிந்துரையில் உள்ள ஓர் தொழில்நுட்ப செயற்பாட்டை இலங்கையில் அதுவும் யாழில் பரிசோதனை செய்ய நினைப்பது எதிர்காலச் சந்ததியினரை அழிக்கும் செயல் என மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.