நள்ளிரவில் தமிழர் வீட்டில் நடந்த பயங்கரம்! இத்தனை இலட்சம் இழப்பா?

காரைதீவு பகுதியில் உகந்தை ஆலயத்திற்கு சென்றவரின் வீட்டில் இருந்த 8 இலட்சம் ரூபாய் பெறுமதியான 15 பவுண் நகைகள் மற்றும் 40 ஆயிரம் ரூபாய் பணம் என்பன திருடப்பட்டுள்ளன.

அம்பாறை – சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காரைதீவு 10 பகுதியிலுள்ள முருகன் கோயில் வீதியில் நேற்று இந்த கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவ தினமான நேற்று காலை உகந்தை மலை ஆலயத்திற்கு சென்று தரிசித்துவிட்டு மாலை 5 மணியளவில் வீட்டில் உள்ளவர்கள் மீண்டும் வீட்டிற்கு திரும்பிய போதே கொள்ளை இடம்பெற்றுள்ளமையினை அவதானித்துள்ளனர்.+

இதுகுறித்து பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் கொள்ளைச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like