இலங்கையில் வெளியான அவசர செய்தி! மீண்டும் குண்டுத் தாக்குதலா? பாதுகாப்பும் தீவிரம்

களுத்துறை முதல் கதிர்காமம் வரையிலான தெற்கின் முன்னணி அரச நிறுவங்களை இலக்கு வைத்து குண்டுத் தாக்குதல் நடத்தப்படலாம் என்ற தகவல் அப் பிரதேசங்களில் பரவியுள்ளது.

இந்த தகவலை அடுத்து அனைத்து அரச நிறுவங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த விடயத்தை உளவுத்துறைகள் எதுவும் உறுதி செய்யவில்லை என கூறப்படுகிறது.

ஆனாலும் மாத்தறை பொலிஸ் அத்தியட்சருக்கு கிடைத்த தகவலை மையப்படுத்தி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அது குறித்து பொது மக்கள் அச்சமடைய வேண்டியதில்லை எனவும் பொலிஸ் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் ருவான் குணசேகர குறிப்பிட்டார்.

இந்த தகவலை மையப்படுத்தி, தெற்கு சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரொஷான் பெர்னாண்டோவின் கீழ் விஷேட விசாரணைகள் ஆரம்பிக்கப்ப்ட்டுள்ளதுடன் பிரதேசத்தின் பாதுகாப்பை உறுதி செய்யும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அதன்படி இந்த உளவுத்துறை உறுதி செய்த தகவலையடுத்து, ருஹுனு பல்கலைக்கழகம் உள்ளிட்ட தெற்கின் பல உயர் அரச நிறுவங்களும் தமது உள்ளக பாதுகாப்பினை பலபப்டுத்தியுள்ளமை குறிப்பிடத் தக்கது.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like