அம்பாறையை பரபரப்படைய செய்த தமிழர்களின் இருவேறு தற்கொலைகள்

அம்பாறை கல்முனை பகுதியில் இன்று இரு வேறு தற்கொலை சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக கல்முனை பொலிஸார் தெரிவித்தனர்.

கல்முனை ஜீ.பி.எஸ் வீதியில் வசிக்கும் 22 வயதுடைய முத்துலிங்கம் ஜெகநாத் என்ற இளைஞன் தனது வீட்டில் சேலை துணியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற கல்முனை பொலிஸாரும் அம்பாறை தடயவியல் பொலிஸாரும் இணைந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்ட இளைஞன் காதல் பிரச்சினை காரணமாக இவ்விபரீத முடிவினை எடுத்துள்ளதாக அருகில் இருந்தவர்கள் தெரிவித்தனர்.

இதே வேளை கல்முனை சேனைக்குடியிருப்பில் குடும்பஸ்தர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

வீட்டுமுற்றத்திலுள்ள மரத்தில் நேற்று திங்கட்கிழமை(8) குறித்தநபர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

இரண்டு பிள்ளைகளின் தந்தையான 53 வயதுடைய கந்தையா யோகலிங்கம் என்பரே இவ்வாறு தற்கொலை செய்துள்ளார்.

குடும்பத்தகராறு காரணமாக குறித்த நபர் தற்கொலை செய்துள்ளதாக தெரியவந்துள்ளதுடன் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் சடலத்தை மீட்டு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சடலம் தற்போது உடற்கூற்று ஆய்வுக்காக கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த இரு தற்கொலைகள் தொடர்பிலும் மேலதிக விசாரணைகளை கல்முனை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like