மூன்று குழந்தைகள் உட்பட குடும்பமே சடலமாக; நாய்களின் செயலைக்கண்டு நெகிழ்ச்சியடைந்த மக்கள்!

குடும்பத்தில் அனைவரும் இறந்துவிட்ட பின் கவனிப்பாரின்றி உடல்நிலை மோசமடைந்த 4 வளர்ப்பு நாய்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த சம்பவம் ஹரியானாவில் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் அறியமுடிவதாவது.

ரசாயன ஆலையில் பணியாற்றி வந்த ஊழியர் ஒருவர், குருகிராமில் குடும்பத்தோடு வசித்து வந்த நிலையில் மனைவியையும் மூன்று குழந்தைகளையும் கொன்ற அவரும் தற்கொலை செய்துகொண்டார்.

இதையடுத்து, லோலா, மவுலி, ப்ளூ, பிப்பா (pippa) என்ற 4 நாய்க்குட்டிகளும் சடலத்தின் அருகிலேயே அமர்ந்திருந்தன. பாசத்தோடு வளர்த்த குடும்பத்தினரும் இறந்து கிடக்க, உணவு நீரின்றி அவதியுற்ற நாய்கள் நான்கும் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தது, இந்த நாய்களின் செயல் அப்பகுதி மக்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியிருந்ததுடன் நாய்கள் மீது பரிதாபத்தை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில் மன உளைச்சலுக்கு ஆளான அவை உடல்சோர்வடைந்த நிலையில் முன்னாள் மத்திய அமைச்சர் மேனகா காந்தி அறிவுறுத்தலின் பேரில் நாய்கள் நான்கும் மீட்கப்பட்டு விலங்குகள் நல வாரியக் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டன. அங்கு அவற்றுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.