இரவிரவாக இருளில் மூழ்கிய குடாநாடு! பின்னணியில் யார்?

யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளிலும் நேற்றைய தினம் மின்சாரம் தடைப்பட்டதனால் மக்கள் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியதாக கூறப்பட்டுள்ளது.

நேற்று முன்னிரவு குடாநாட்டின் சில பக்திகளில் இலேசான மழைத்தூறல் அரம்பித்த நிலையில் சற்று நேரத்தில் மின்சாரம் தடைப்பட்டது.

இடி மின்னலோ அல்லது புயல் காற்றோ இல்லாத நிலையில் மின்சாரம் எவ்வித அறிவிப்புக்களுமின்றி மழைத்தூறலையடுத்து இடை நிறுத்தப்பட்டது.

இருந்தாலும் சில நிமிடங்களில் மீண்டும் வழமைக்குத் திரும்பிய மின்சாரம் பின்னிரவு வேளை மீண்டும் நிறுத்தப்பட்டதுடன் காலை விடிந்தும் வழமைக்குத் திரும்பவில்லை என்றும் இதனால் பாடசாலைகளுக்கு செல்லும் மாணவர்கள், அலுவலகங்கள் மற்றும் வேலைக்குச் செல்லும் மக்கள் என பலரும் அசௌகரியத்திற்கு ஆளானார்கள்.

இந்த நீண்ட மின்வெட்டினால் நேற்றிரவு குடாநாடு இருளில் மூழ்கியதாக எமது பிரதேச செய்தியாளர்கள் கூறுகின்றார்கள்.

இதேவேளை குடாநாட்டில் பல்வேறு ஜெனரேற்றர் நிறுவனங்கள் கால்பதித்துள்ளதனால் இந்த மின்வெட்டைப் பயன்படுத்தி பல பகுதிகளிலும் மின்சாரம் விநியோகிக்கும் செயற்பாட்டை வியாபார நோக்கத்துடன் ஆரம்பித்துள்ளதாக தெரியவருகிறது.

இந்த நிலையில் நீண்டநேர மின்வெட்டின்பின்னால் இந்த ஜெனரேற்றர் நிறுவனங்களின் வியாபார நோக்கமும் இலைமறை காயாக காணப்படலாமென மக்கள் சந்தேகிக்கின்றனர்.