ஏன் நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு எதிராக வாக்களித்தோம்? சுமந்திரன் விளக்கம்

ஏப்ரல்21 தாக்குதல் பொறுப்பை ஜனாதிபதியை தவிர்த்து அரசாங்கத்தின் மீது மாத்திரம் பாரப்படுத்த முடியாது என்பதாலேயே அவநம்பிக்கை பிரேரணையை எதிர்த்தோம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

மக்கள் விடுதலை முன்னணியினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணை மீது இன்று வாக்கெடுப்பு இடம்பெற்றது. இதன்போது பிரேரணைக்கு 92 பேர் ஆதரவாகவும் எதிராக 119 பேரும் வாக்களித்தனர்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசாங்கத்திற்கு ஆதரவாக வாக்களித்திருந்தது. இந்நிலையில் இது தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதில் வழங்கிய சுமந்திரன், ஏப்ரல்21 தாக்குதல் பொறுப்பை ஜனாதிபதியை தவிர்த்து அரசாங்கத்தின் மீது மாத்திரம் பாரப்படுத்த முடியாது என்பதாலேயே அவநம்பிக்கை பிரேரணையை எதிர்த்தோம் என்று குறிப்பிட்டார்.

இதேவேளை, ரணில் விக்ரமசிங்க வழமைபோன்று கப்பம் கொடுத்தே நம்பிக்கையில்லா பிரேரணையை வெற்றிகொண்டார் என ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார திசாநாயக குற்றம்சாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.