எதிர்ப்புகளை மீறி ஆபிரிக்கருடன் இடம்பெற்ற பிரபல இசைக் கலைஞர் சுதா ரகுநாதனின் மகள் திருமணம்

பிரபல கர்நாடக இசைக் கலைஞர் சுதா ரகுநாதனின் மகள் மாளவிகாவிற்கும், வெளிநாட்டைச் சேர்ந்த கிறிஸ்தவரான மைக்கல் மர்பிக்கும் வைணவ முறைப்படி சென்னையில் இன்று திருமணம் நடைபெற்றது.

சில நாட்களுக்கு முன்னர், பிரபல கர்நாடக இசைக் கலைஞர் சுதா ரகுநாதனின் மகள் மாளவிகா, வெளிநாட்டைச் சேர்ந்த கிறிஸ்தவரை திருமணம் செய்ய உள்ளதாக தகவல் வெளியான நிலையில், சுதா ரகுநாதனுக்கு பல இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்ததோடு, , சபாக்களில் பாடுவதற்கு அவருக்கு வாய்ப்பு வழங்க கூடாது என்றும் எதிர்ப்புகளை அவர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில் , சுதா ரகுநாதனின் மகள் மாளவிகாவுக்கும், ஆப்பிரிக்க நாட்டை பூர்வீகமாக கொண்ட மைக்கேல் மர்பி என்பவருக்கும் இடம்பெற்ற திருமணம் நிச்சயம் தொடர்பான புகைப்படங்கள், திருமண பத்திரிக்கை புகைப்படம் போன்றவைகள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டது.

நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!

இத்தகைய சூழலில், சுதா ரகுநாதனின் மகள் மாளவிகாவிற்கும், மைக்கல் மர்பிக்கும் வைணவ முறைப்படி சென்னையில் இன்று திருமணம் நடைபெற்றது.

இந்த திருமண நிகழ்வில், இரு குடும்பத்தாரின் உறவினர்கள் மற்றும் நெருங்கியவர்கள் மட்டுமே கலந்துகொண்டதாக தெரிவிக்கபடுகின்றது.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like