யாழில் திருமண மண்டபத்திற்கு வந்தவருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி! இப்படி ஒரு மணமகனா.?

யாழில் நேற்று நடக்கவிருந்த திருமணம் ஒன்று நிறுத்தப்பட்டுள்ளது.

வலிகாமம் பகுதியைச் சேர்ந்த விஞ்ஞானப்பட்டதாரியான இளம் பெண்ணுக்கு, கொழும்பில் தனியார் நிறுவனம் ஒன்றில் அதிகாரியாக கடமையாற்றும் பொறியியலாளரை திருமணத்திற்காக நிச்சயிக்கப்பட்டிருந்தது.

நல்லுார்ப் பகுதியைச் சேர்ந்த 31 வயதான பொறியியலாளர் எனவும் 4 வருடங்களாக கொழும்பு நிறுவனத்தில் அதிகாரியாக கடமையாற்றுபவர் எனவும் தெரியவருகின்றது.

இந் நிலையில் மணப் பெண்ணின் முகப்புத்தகத்திற்கு பெண் ஒருவரின் முகப்புத்தக கணக்கிலிருந்து குறித்த இஞ்சினியரின் நிர்வாணப் புகைப்படங்கள் மற்றும் பெண் ஒருவருடன் சேர்ந்து அலங்கோலமாக இருக்கும் புகைப்படங்களும் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.

இதனைப் பார்வையுற்று அதிர்ச்சியடைந்த மணப்பெண் இது தொடர்பாக தனக்கு புகைப்படங்களை அனுப்பிய பெண்ணைத் தொடர்பு கொண்ட போது அப் பெண் மூலமாக ஏராளமான அதிர்ச்சித் தகவல்கள் மணப்பெண்ணிற்கு தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனால் கடும் குழப்பமடைந்த மணப் பெண் தனது சகோதரர்கள் மற்றும் பெற்றோருக்கு தெரியப்படுத்தினார்.

இதனையடுத்து நடந்த விசாரணையில் அந்த பொறியியலாளர் முதலில் அந்த புகைப்படங்கள் கிறபிக்ஸ் என மறுத்து பின்னர் தனது செயற்பாட்டை சினிமாப் பாணியில் ஒத்துக் கொண்டுள்ளார்.

அதாவது தான் மது விருந்து ஒன்றுக்கு அழைக்கப்பட்டதாகவும் அங்கு தனக்கு அளவுக்கதிகமான மதுவினை ஊற்றி தந்து தன்னை கடும் போதையாக்கிவிட்டு தன்னை பல தடவைகள் சிலர் திட்டமிட்டு பெண்களை தன்னுடன் ஒன்றாக இருக்கவிட்டு பழி வாங்கியதாகவும் மணமகளின் உறவுகளுக்கு றீல் விட்டுள்ளார்.

சம்பவம் உண்மை என்பதை அறிந்த மணமகளின் உறவுகள் திருமணத்தை நிறுத்தியுள்ளர்.

நேற்று யாழில் உள்ள பிரபல மண்டபத்தில் நடக்கவிருந்த இவர்களின் திருமண நிகழ்வு குழம்பியது.

ஏற்கனவே திருமண அழைப்பிதழ்கள் கொடுக்கப்பட்ட ஏராளமானவர்கள் குறித்த மண்டபத்துக்கு வருகை தந்த போது திருமணம் நிறுத்தப்பட்டுள்ளதாக மண்டபவாசலில் இருந்த அறிவித்தலை பார்த்தபின்னர் வீடு திரும்பியிருந்தனர்.

குறித்த இஞ்சினியருக்கு சீதனமாக ஒரு கோடிரூபா அளவில் கொடுப்பதற்கும் கொழும்பில் வீடு கொடுப்பதற்கும் மணமகளின் உறவுகள் சம்மதித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like