விடுமுறைக்காக வீட்டுக்கு வந்த பெண் செய்த விபரீத காரியம்! பெரும் சோகத்தில் பெற்றோர்

விடுமுறைக்காக வீட்டிற்கு வந்த யுவதி ஒருவர் திடீரென தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஒன்று இந்தியா ஐதராபாத் மாநிலத்தில் நடைபெற்றுள்ளது.

ஐதராபாத் மாநிலத்தை சேர்ந்த லிங்கா என்பவரின் 23 வயதுடைய மகள் விஜயா என்பவரே இந்த முடிவை எடுத்துள்ளார்.இவர் தனியார் பொறியியல் கல்லூரியில் தங்கி படித்து வருகிறார்.

இந்த நிலையில் விடுமுறைக்காக வீடு திரும்பிய விஜயா, தன்னுடைய அறையில் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பெற்றோர் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார், விஜயாவின் உ டலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!

இந்நிலையில் விஜயாவின் சகோதரர் ரகுமா, நரேஷ் என்கிற இளைஞர் தன்னுடைய சகோதரிக்கு தொடர் தொல்லை கொடுத்து வந்ததாகவும், தற்கொலை செய்துகொள்வதற்கு முன்தினம் இரவு 8 மணியளவில் போன் செய்ததாகவும் புகார் கொடுத்துள்ளார். அதன்பேரில் வழக்கு பதிவு செய்துள்ள பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like