இந்தியாவில் பேருந்தில் சென்றுகொண்டிருந்த யாழ்ப்பாணத்தை சேர்ந்த நபருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட இலங்கை வாலிபர் ஒருவரை பொலிசார் இன்று கைது செய்துள்ளனர்

தமிழகம் நாகை மாவட்ட பகுதியில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் மேலும் அறியமுடிவதாவது,

நாகை மாவட்டம் வேதாரண்யம் கடல் வழியாக இலங்கைக்கு கஞ்சா, போதை பொருட்கள் கடத்தப்பட்டு வருகிறது. இதனால் கடலோர காவல் படையினர், மற்றும் கியூ பிராஞ்ச் பொலிசார் தொடர்ந்து கடல்பகுதிகளை கண்காணித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட இலங்கை வாலிபரை பொலிசார் இன்று கைது செய்தனர்.

வேதாரண்யம் பஸ் நிலையத்தில் இருந்து ஒரு வாலிபர், கள்ளிமேடு செல்லும் பஸ்சில் சென்றார். அவர் மீது மற்ற பயணிகளுக்கு சந்தேகம் எழுந்ததால் இதுபற்றி வேதாரண்யம் கியூ பிராஞ்சு பொலிசாருக்கு தகவல் கொடுத்தனடிப்படையில் விரைந்து வந்த பொலிஸார் அந்த வாலிபரிடம் விசாரித்தனர்.

அப்போது அந்த வாலிபர் இலங்கை காங்கேசன் துறைமுகம் அருகே வல்வெட்டி துறையை சேர்ந்த அருளானந்தசாமி பார்த்தசாரதி (வயது40) என்று தெரிய வந்தது.

மேலும் அவரிடம் பாஸ்போர்ட், மற்றும் விசா இல்லாததால் பொலிசார் அதிரடி விசாரணை நடத்தினர். இதில் கஞ்சா வாங்குவதற்காக மேலும் 2 பேருடன் கடல் வழியாக வேதாரண்யம் மணியன்தீவுக்கு வந்ததாக அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.