பாணின் விலை 5 ரூபாவால் அதிகரிப்பு

450 கிராம் எடையுள்ள பாண் ஒன்றில் விலை 5 ரூபாவால் அதிகரிக்கப்படுவதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

கோதுமை மா ஒரு கிலோ கிராமின் விலை 8 ரூபால் அதிகரித்துள்ளதாக பிறிமா நிறுவனம் அறிவித்தது. இந்த விலை அதிகரிப்பு நேற்று செவ்வாய்க்கிழமை முதல் நடைமுறைக்கு வருவதாகவும் அந்த நிறுவனம் குறிப்பிட்டது.

இந்த நிலையில் 450 கிராம் எடையுள்ள பாண் ஒன்றில் விலை 5 ரூபாவால் இன்று (ஜூலை 17) நள்ளிரவு முதல் அதிகரிப்பதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like