துஷ்பிரயோகம் செய்த முஸ்லிம் சிறுமிக்கு நேர்ந்த கதி! கண்ணீருடன் வாழ்க்கை

பாலியல் துஸ்பிரயோகத்துக்கு உள்ளான சிறுமி ஒருவரை பலவந்தமாக, துஸ்பிரயோகத்துக்கு உட்படுத்தியவருக்கே காதி நீதிமன்றம் ஒன்று திருமணம் செய்துவைத்த சம்பவம் ஒன்று, கண்டியில் பதிவாகியுள்ளது.

இதற்கு எதிராக குறித்த சிறுமியின் தந்தை காவற்துறையில் முறைப்பாடு செய்ய முயற்சித்த போதும், காதி நீதிமன்றின் நீதிபதிகள் அதனை தடுத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

கண்டியில் வசிக்கின் முஸ்லிம் பெண் ஒருவர் அவரது மகளால் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் 16 வயதான தமது மகளால் தாக்கப்பட்டமையும், தமது மகள் பாலியல் துஸ்பிரயோகத்துக்கு உள்ளாமையால், உளரீதியாக பாதிக்கப்பட்டிருக்கின்றமையும் தெரியவந்தது.

பின்னர் அவரது மகள் வைத்தியசாலைக்கு அழைக்கப்பட்டு வைத்தியர்களால் விசாரிக்கப்பட்ட போது, அவரை துஸ்பிரயோகப்படுத்திய நபரையே அவரதும், அவரது குடும்பத்தினரதும் விருப்பதுக்கு விரோதமாக காதி நீதிமன்றத்தினால் திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

பின்னர் அந்த நபர் குறித்த சிறுமியுடன் சில நாட்கள் வசித்துவிட்டு, பின்னர் அவர் அங்கிருந்து தலைமறைவானார்.

அவரிடம் இருந்து விவாகரத்துபெற குறித்த சிறுமி விரும்பினாலும், அதற்கு காதி நீதிமன்றம் அனுமதிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

அதற்கு எதிராக நீதிமன்றம் செல்வதற்கு எதிராக அச்சுறுத்தல் விடுக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.

இந்த ஆண்டு கல்விப்பொதுத்தராதர சாதாரணத் தர பரீட்சைக்கு தோற்றவிருந்த நிலையில் தமது மகளது எதிர்காலம் கேள்விக்குறியாகி இருக்கிறது என்று அவரது பெற்றோர் கவலைத் தெரிவித்தனர்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like