விடுதலைப் புலிகளின் வருவாய்த்துறை அலுவலகம் இயங்கிய பகுதி படையினரால் சுற்றி வளைப்பு! காரணம் இதுவா??

வவுனியா புளியங்குளத்தில் உள்ள வீட்டுக் கிணறொன்றிலிருந்து இன்று காலை இராணுவத்தினரால் ஆயுதங்கள் சில மீட்கப்பட்டுள்ளன.

இராணுவத்தினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து புளியங்குளம் பெரியமடு விசேட அதிரடிப்படையினர் மற்றும் இராணுவத்தினர், பொலிஸார் இணைந்து இந்த ஆயுதங்களை மீட்கும் செயற்பாட்டை முன்னெடுத்தனர்.

இதன்போது விடுதலைப்புலிகளால் மறைத்து வைக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 81எம்.எம்.குண்டுகள் 11, ரி.56 துப்பாக்கி , மிதி வெடி உட்பட சில ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் குறித்த பகுதி விடுதலைப்புலிகளின் வருவாய்த்துறை அலுவலகம் செயற்பட்டு வந்ததாக அடையாளம் காணப்பட்டுள்ளது.

இன்று காலை 10 மணியளவில் ஆரம்பிக்கப்பட்ட இத் தேடுதலானது ஓமந்தையின் 563 ஆவது பிரிகேட்டின் கேணல் பண்டுக்க பெரேரா மற்றும் புளியங்குளம் விசேட அதிரடிப்படையின் பொறுப்பதிகாரி நிசந்த ஆகியோரின் தலைமையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like