பிக்பாஸ் வீட்டில் இருந்து மோகன் வைத்தியா வெளியேறிதற்கு இது தான் உண்மை காரணமா?..

பிக்பாஸ் வீட்டில் இருந்து ஏன் மோகன் வைத்தியாவை வெளியேற்றியனார்கள் என்பதற்கான உண்மையான காரணம் தற்போது வெளியாகியுள்ளது.

பிக் பாஸ் 3 வீட்டில் இருந்து பாத்திமா பாபு, வனிதா விஜயகுமாரை அடுத்து அப்பா என்ற பெயரில் அட்டகாசம் செய்து வந்த மோகன் வைத்யா வெளியேற்றப்பட்டுள்ளார். வனிதா விஜயகுமாரை வெளியேற்றியபோது பாவப்பட்ட பார்வையாளர்கள் மோகன் வைத்யா கிளம்பியதால் சிங்கிள் பசங்க எல்லாம் மகிழ்ச்சியில் உள்ளனர்.

மோகன் வைத்யா வெளியேற்றப்பட்டதால் பிக் பாஸ் 3 வீட்டில் இருக்கும் பெண் போட்டியாளர்கள் இனி நிம்மதியாக இருக்கலாம். அப்பா என்ற பெயரில் கட்டிப்பிடித்து முத்தம் கொடுப்பது, முத்தம் கொடுக்கச் சொல்வது, இடுப்பில் கையை போடுவது என்று இனி பாலியல் தொல்லை எதுவும் நடக்காது என்று பார்வையாளர்கள் தெரிவித்துள்ளனர். எவிக்ஷன் கார்டில் மோகன் வைத்யாவின் பெயரை பார்த்ததும் லாஸ்லியாவுக்கு அப்படி ஒரு நிம்மதி. மோகன் வைத்யாவின் குணம் அறிந்ததால் அவர் நிம்மதி அடைந்திருக்கிறார்.

நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!

மோகன் வைத்யா தனது வயதை காரணம் காட்டி பெண் போட்டியாளர்களை சும்மா சும்மா கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்ததை பாலியல் தொல்லை என்று பேசத் துவங்கிவிட்டனர் பார்வையாளர்கள். பாலியல் தொல்லை பிரச்சனை இனி வேண்டாம் என்று நினைத்து தான் பிக் பாஸ் மோகன் வைத்யாவை பேக்கப் பண்ணிவிட்டார் என்று விமர்சனம் எழுந்துள்ளது.

பிக் பாஸ் வீட்டில் இருந்து கிளம்பும் முன்பு மோகன் வைத்யா பண்ண ஓவர் ஆக்டிங்கை பார்த்து யாருக்கும் அவர் மீது பாவப்படத் தோன்றவில்லை. மாறாக போதும் போதும் நடிப்பு ஓவராக இருக்கு வீட்டை விட்டு கிளம்புங்க என்று தான் பார்வையாளர்கள் எரிச்சலுடன் தெரிவித்தனர். இந்த சீசனில் ஒரு போட்டியாளர் கிளம்பியதை பார்த்து பார்வையாளர்கள் இவ்வளவு சந்தோஷப்பட்டது மோகன் வைத்யாவுக்கு தான்.

மோகன் வைத்யா கிளம்பியபோது மீரா மிதுன் அவரை கட்டிப்பிடிக்க வர அவர் கண்டுகொள்ளவில்லை. இதையும் பார்வையாளர்கள் விளாசியுள்ளனர். யாருமே இல்லை என்று கண்ணீர் விட்டீர்கள் ஆனால் பிக் பாஸ் வீட்டில் நீங்கள் நடந்து கொண்டதை பார்க்கும்போது உங்களின் கெட்ட எண்ணத்திற்கு இனியும் யாருமே இருக்க மாட்டார்கள் என்று பார்வையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like