சனி கிரகத்துடன் தொடர்புடைய இந்த விரல் நீளமா இருக்கா? உங்க வாழ்க்கை இப்படிதான் இருக்குமாம்…!

அனைத்து விரல்களும் ஒரே மாதிரி இருக்காது என்று கூறுவது முழுவதும் உண்மை.

ஒவ்வொன்றும் ஒவ்வொரு நீளத்திலும், வடிவத்திலும் இருக்கும். உங்கள் விரலின் நீளங்கள் மட்டுமின்றி அவற்றின் சில பண்புகளும் அவற்றை வித்தியாசப்படுத்தி காட்டும்.

உங்கள் விரல்கள் உங்களின் ஆளுமையை காட்டும் கண்ணாடியாகவும் இருக்கிறது. ஜோதிட சாஸ்திரத்தின் படி நமது ஒவ்வொரு விரலுக்கும் ஒரு கிரகத்துடன் தொடர்புள்ளது.

அது ஒவ்வொன்றும் நமது ஆளுமையின் மீதும், செயல்பாடுகள் மீதும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

நடுவிரல்
உங்களின் நடுவிரலானது சனி கிரகத்துடன் தொடர்புடையது.

நடுவிரல் மிகவும் நீளமாக இருப்பவர்கள் அசாதாரணமான அதேசமயம் வித்தியாசமான வாழ்க்கையை வாழ்வார்கள்.

மோதிர விரல்
உங்களின் நடுவிரல் மோதிர விரலை விட நான்கில் ஒருமடங்கு பெரியதாக இருந்தால் அது நல்லதாகும். அவர்கள் வாழ்க்கையில் பெரிய வெற்றிகளை அடைவார்கள். ஒருவேளை மோதிர விரல் நடுவிரலை விட நீளமாக இருந்தால் அவர்கள் வாழ்க்கையில் பல பிரச்சினைகளை சந்திக்க நேரிடும்.

விரல் இடைவெளி
மோதிர விரலுக்கும், நடுவிரலுக்கும் இடையில் இடைவெளி மிகவும் குறைவாக இருந்தால் அவர்கள் அதிக சுதந்திரமானவர்களாக இருப்பார்கள். அதேசமயம் இடைவெளி மிகவம் அதிகமாக இருந்தால் அவர்கள் அதிக அலட்சிய குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

நீளமான விரல்கள்
அனைத்து விரல்களும் நீளமாக இருப்பவர்கள் அவர்கள் காதல் மற்றும் பொறுமை அனைத்தும் நிறைந்தவர்களாக இருப்பார்கள். ஆனால் பிடிவாத குணம் இவர்களிடம் அதிகமாக இருக்கும்.

குட்டையான விரல்கள்
குட்டையான விரல்களை கொண்டவர்களுக்கு பொறுமை என்பதே இருக்காது. அவர்கள் வாழ்க்கையில் அனைத்து முடிவுகளையும் வேகமாக எடுக்க நினைப்பார்கள். மற்றவர்களுடன் ஒத்துப்போக கூடியவர்களாகவும், கற்பனைத்திறன் அதிகம் உள்ளவர்களாகவும் இருப்பார்கள்.