லண்டனில் வரலாறு காணாத திடீர் மாற்றம்! மக்களிற்கு அவசர எச்சரிக்கை

இங்கிலாந்தில் மிகக் கடுமையான வெப்பஅனல் வீசுவதனால் இன்றையதினம் மிக உயர்வான வெப்பநிலை நாளாக பதிவாகவுள்ளது.

2003 ஆம் ஆண்டு ஒகஸ்ற் மாதம் பதிவான உயர்ந்த வெப்பநிலை 38.5°C என்பதனை முறியடிக்க 70% வாய்ப்பு இருப்பதாக வானிலை அலுவலகம் தெரிவித்துள்ளது.

இங்கிலாந்தின் தெற்கு மற்றும் கிழக்குப் பிராந்தியங்களில் இன்று வியாழக்கிழமை 39°C வெப்பநிலை ஏற்படும் என்று வானிலை அலுவலகம் கூறியுள்ளது.

இதேவேளை கடுமையான வெப்பம் காரணமாக ரயில் தடங்கள் வளைந்துகொடுக்கும் அபாயம் உள்ளதால் ரயில் போக்குவரத்துக்களில் தடங்கல் ஏற்படும் என்று ரயில் போக்குவரத்து வலையமைப்பு அறிவித்துள்ளது.

நேற்றுப் புதன்கிழமை சஃபேக்கில் உள்ள கவன்டிஷ்ஷில் 33.7°C வெப்பநிலை பதிவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அத்துடன் பொது மக்கள் இக்காலப்பகுதியில் உணவு விடயத்தில் முடியுமான வரை நீராகாரம் உண்ணுவது முக்கியம் எனவும் வெளியில் செல்லும் போது அவதானமாக செயற்படுமாறும் மக்களிற்கு சில அவதானக் குறிப்புக்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.