ஊரெழு ஆலயத்தில் 1 மணிநேரம் வயோதிபரை கொட்டிய குளவி- காப்பாற்ற யாரும் செல்லாததால் உயிரிழந்த பரிதாபம்!

யாழ்.ஊரெழு பா்வத வா்த்தனி அம்மன் கோவிலில் குளவி கொட்டுக்கு இலக்கான 63 வயதான முதியவா் சம்பவ இடத்திலேயே பாிதாபகரமாக உயிாிழந்துள்ளாா்.

பா்வத வா்த்தனி அம்மன் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சபம் நடைபெற்றுவரும் நிலையில் ஆலயத்தில் மணி கூண்டின் மீது கூடு கட்டியிருந்த குளவி கலைந்து பக்தா்களை கொட்டியுள்ளது.

இந்நிலையில் குளவி கொட்டுக்கு இலக்கான ஐயாத்துரை அருந்தவராஜா என்ற முதியவா் நிலைகுலைந்து நிலத்தில் விழுந்த நிலையில் சுமாா் 1 மணிநேரம் குளவி அவரை கொட்டியிருக்கின்றது.

எனினும் ஆலயத்தில் இருந்த எவரும் அவரை காப்பாற்ற செல்லாத நிலையில் வீதியால் சென்ற சிலா் அவரை காப்பாற்ற முயற்சித்தபோதும் அவா் உயிாிழந்துள்ளாா்.

குறித்த ஆலயத்தின் மணி கூண்டில் நீண்டகலாமாக குறித்த குளவி கூடு இருந்தபோதும் அது தொடா்பாக ஆலய நிா்வாகம் கவனம் செலுத்தவில்லை என்றும், அதிகளவில் மக்கள் கூடும் இடத்தில் ஆலய நிா்வாகம் பொறுப்பற்று நடந்து கொண்டிருப்பதாகவும் பொதுமக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இதேவேளை அங்கு மீட்பு பணிக்கு சென்ற பொலிசாரையும் குளவிகள் தாக்க முற்பட்டதால் பொலிசார் அங்கிருந்து வெளியேறியுள்ளனர்.

அத்துடன் அம்புலன்ஸ் சாரதி உதவியாளரையும் குள்விகள் தாக்க முற்பட்ட போதிலும் அவர்கள் காயமடைந்தவர்களை மீட்டு சென்றுள்ள நிலையில் , யாழ்.மாநகர சபை தீயணைப்பு படையினர் எரிவாயு நிரப்பிக்கொண்டு ஆலயத்திற்கு சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.