யாழிலிருந்து மோடிக்கு பறந்த அவசர கடிதம்! எங்களை காப்பாற்றுங்கள்!

திருக்கேதீச்சரம், கன்னியா, நீராவியடி பிள்ளையார் ஆலயங்களில் இந்துக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் இந்தியா தலையிட்டு இலங்கை இந்துக்களை காப்பாற்றுமாறு தெரிவித்து இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு அவசர கடிதமொன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

குறித்த கடிதத்தினை யாழிலுள்ள இந்து அமைப்புக்கள் கூட்டாக இணைந்து இந்திய துணை தூதரின் ஆலோசனையின் பேரில் அனுப்பி வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் இந்துக்கள் பெரும் பிரச்சனைகளை சந்திக்கிறார்கள். அவர்களின் வாழ்விடங்களும், வழிபாட்டிடங்களும் ஆக்கிரமிக்கப்பட்டு வருகின்றன. உடனடியாக தலையிட்டு இலங்கை இந்துக்களை காப்பாற்றுங்கள்“ என இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் மூலம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக இந்துக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் யாழிலுள்ள இந்து அமைப்புக்கள், மற்றும் சிவில் செயற்பாட்டாளர்கள் கலந்துரையாடலொன்றில் ஈடுபட்டுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து யாழிலுள்ள இந்திய துணை தூதரகத்திற்கு சென்று, துணைத்தூதரை சந்தித்து கடிதத்தினை அனுப்பி வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like