ஆலயங்கள் எப்பொழுதுமே புனிதத்தை பேணவேண்டிய இடங்கள். இந்நிலையில் வவுனியாவில் உள்ள இந்து ஆலயம் ஒன்றில் இராணுவத்தினர் சப்பாத்து காலுடன் தொண்டுபணிகளில் ஈடுபட்டுள்ளமை பலரையும் வேதனை கொள்ளாச்செய்துள்ளது.
ஆலயப்பணிகள் செய்வது எப்பொழுதும் நல்லதுதான். ஆனால் எப்படி செய்யவேண்டும் என சில விதிகள் உள்ளன.
இந்துக்கள் செறிந்து வாழ்கின்ற பகுதியில் உள்ள ஓர் ஆலயத்தில் ஆலயப்பணி செய்வதற்கு யாரும் இல்லை என்பது வேதனைக்குரிய விடயம்.
இப்படியே அடுதவர்கள் செய்யட்டும் நமக்கென்ன என இருப்பதால் தான் எமது வழிபாட்டிடங்களை மற்றவர்கள் உரிமைகோருகின்ற நிலையை நாமே உருவாக்கிவிடுகின்றோம்.
ஒருகாலத்தில் ஆலயங்களில் திருவிழா என்றால் அவ்வூர் மக்கள் ஒன்றிணைந்து கிராமத்தையும் ஆலயத்தையும் சுத்தம் செய்து சிரமதானப்பணிகளில் ஈடுபடுவார்கள். ஆனால் இன்றைய நிலையில்! யாராவது செய்யட்டும் நமகென்ன என இருந்துவிடுகின்றோம்.
புத்தர்கள் அடாத்தாக இந்துக்கோயில்களில் குடியேறுவதற்கு நாமே தான் காரணம் என்பதை எம் சமுதாயம் என்றுதான் உணர்ந்துகொள்ளுமோ?







