யாழ் மாநரசபை முதல்வரினால் அனுமதிக்கப்பட்ட ஸ்மார்ட் போல் திட்டத்தால் யாழ் நகரிலிருந்து குடும்பமொன்று இடம்பெயர்ந்துள்ளதாக தெரியவருகின்றது.
யாழ் இந்து ஆரம்பப்பாடசாலைக்கு அருகில் அமைக்கப்பட்ட ஸ்மார்ட் போல் கம்பம், சாதாரண மழைக்கே சரிந்து விழும் அபாயம் ஏற்பட்டதையடுத்து, கம்பத்திற்கு அருகிலுள்ள குறித்த வீட்டிலிருந்தவர்கள் அங்கிருந்து வெளியேறியுள்ளனர்.

இந்நிலையில் ஸ்மார்ட் போல் கம்பம் சரிவது தொடர்பில் யாழ் மாநகரசபைக்கு அறிவித்தும் அவர்கள் பாராமுகமாக இருந்ததாகவும் அவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
இதன்காரணமாக வேறு வழியின்றி உயிரை பாதுகாத்துக் கொள்ள வீட்டை விட்டு வெளியேறியதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை 5ஜி திட்டத்திற்காக குறித்த கம்பம் நடப்படுவதாக தெரிவித்து, அப் பகுதி மக்கள் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.






