ஜரோப்பிய நாடுகளை நோக்கி 300-க்கும் மேற்பட்ட அகதிகள் சென்ற படகு நடுக்கடலில் கவிழ்ந்தது; உலகையே உலுக்கிய சோக சம்பவம்!

அகதிகள் சென்ற படகு, நடுக்கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 150 பேர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

லிபியாவிலிருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு குடியேறுவதற்காக சென்ற அகதிகள் படகே இவ்வாறு கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

சொந்த நாடுகளில் வாழ்வாதாரம் இல்லாமல் தவிக்கும் மக்கள், அண்டைநாடுகளுக்கு புலம்பெயர்ந்து வாழ்வாதாரம் ஈட்ட முயற்சிக்கின்றனர்.

நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!

அவ்வாறு குடியுரிமை சான்று கிடைக்காமல் சட்டவிரோதமாக பிற நாடுகளில் குடியேற முயற்சிப்போரை கடத்தல் கும்பல் ஆசை வார்த்தை கூறி, அவர்களிடம் பணம் உள்ளிட்ட பொருட்களை பறித்துக்கொண்டு, இறுதியாக ஏதோ படகில் ஒட்டுமொத்தமாக அகதிகளை ஏற்றிவிட்டு செல்கிறது.

அந்தபடி, அண்மையில் லிபியாவின் அல் கோம்ஸ் நகரில் இருந்து ஒரு படகில் 300-க்கு மேற்பட்ட அகதிகள் ஐரோப்பிய நோக்கி பயணித்துள்ளனர்.

அவர்கள் சென்ற படகு நடுக்கடலில் கவிழ்ந்ததில் 150 உயிரிழந்திருக்கலாம் எனவும் அஞ்சப்படுகிறது.

இந்நிலையில் இச்சம்பவம் உலகம் முழுவதும் வாழும் மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like