பெற்றோருடன் தர்க்கத்தில் ஈடுபட்ட அயல் வீட்டாரை தட்டிக் கேட்ட நபர், பெண் ஒருவரால் கடுமையாகத் தாக்கப்பட்டார்.
இந்தச் சம்பவம் யாழ்ப்பாணம் குப்பிளான் பகுதியில் நடந்துள்ளது.
பெற்றோர் அயல் வீட்டாருடன் முரண்பாடு என மன்னாரில் வசிக்கும் மகனுக்குத் தகவல் வழங்கியுள்ளனர்.
மன்னாரில் இருந்த மகன் குப்பிளானுக்கு வந்து அயல் வீட்டிற்குச் சென்றுள்ளார்.
இதன்போது தர்க்கம் ஏற்பட்டுள்ளது. பெண் ஒருவர் அவரைக் கடுமையாகத் தாக்கியுள்ளார்.
படுகாயமைடைந்தவர் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.






