கிளிநொச்சி பரந்தன் சிவபுரத்தை சேர்ந்த 13வயதான சிறுமியே, தனது தந்தையால் சீரழிக்கப்பட்டவர்.
தனது சொந்த மகளையே பாலியல் வன்புணர்விற்குள்ளாக்கிய தந்தை தலைமறைவாகியுள்ளார். அவரை வலைவிரித்து பொலிஸார் தேடி வருகின்றனர்.
சிறுமி சீரழிக்கப்பட்டதையடுத்து, கடந்தவாரம் தனது தாயாருடன் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்திற்கு சென்று இது தொடர்பாக முறைப்பாடு பதிவு செய்தார்.
தாயார் வேலைக்கு சென்ற பின்னர், சிறுமியை அச்சுறுத்தி வன்புணர்விற்குள்ளாக்கியுள்ளார் தந்தை.
மூன்று தடவைகள் தந்தையார் தன்னை வன்புணர்விற்குள்ளாக்கியதாக சிறுமி வாக்குமூலம் வழங்கியிருந்தார்.
மருத்துவ பரிசோதனையிலும் சிறுமி சீரழிக்கப்பட்டது உறுதியானது.
சிறுமியின் வாக்குமூலத்தின் அடிப்படையில், கிளிநொச்சி பொலிஸாரால் முதல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தற்போது தலைமறைவாகியுள்ள தந்தையாரை தேடி வருவதாகவும், நாடு முழுவதிலுமுள்ள பொலிஸ் நிலையங்களிற்கு அவர் பற்றிய தகவலை வழங்கியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.






