பவுண்ட்ஸ் பெறுமதி கடும் வீழ்ச்சி! சுற்றுலா செல்லும் பிரித்தானியர்களுக்கு காத்திருக்கும் பாதிப்பு

உடன்படிக்கை இல்லாமல் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா வெளியேறுவதாக அறிவித்துள்ள நிலையில், அமெரிக்க டொலருக்கு நிகரான பிரித்தானியா பவுண்ட்ஸின் பெறுமதி நாணய சந்தையில் கடும் வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, அமெரிக்க டொலருக்கு நிகரான பிரித்தானிய பவுண்ட்ஸின் பெறுமதி 1.2120ஆக பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், யூரோவிற்கு நிகராக 1.0881ஆக பிரித்தானிய பவுண்ஸின் பெறுமதி வீழச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பவுண்ட்ஸின் மதிப்பு வீழ்ச்சி என்பது வெளிநாடுகளுக்குச் செல்லும் பிரித்தானிய சுற்றுலாப் பயணிகள் ஒரு “பயங்கரமான கோடைகாலத்தை” எதிர்கொள்ளக்கூடும் என நாணய நிபுணர் ஒருவர் கூறியுள்ளார்.

இதேவேளை, இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் அமெரிக்க டொலருக்கு நிகராக பிரித்தானியா பவுண்ட்ஸின் பெறுமதி நாணய சந்தையில் கடும் வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.