காணொளி எடுத்த மர்ம நபரால் சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் பரபரப்பு

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தை சந்தேகத்திற்கு இடமான முறையில் காணொளி எடுத்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸார் நடத்திய விசாரணையில் இவர் அம்பாறை – அக்கரைப்பற்று பகுதியைச் சேர்ந்த முஸ்லிம் நபர் எனத் தெரியவந்துள்ளது.

உடனடியாக விரைந்த பொலிஸார் சந்தேக நபரை கைது செய்ததோடு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தினர்.

இதன்போது சந்தேக நபரை எதிர்வரும் 06ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு பலாங்கொடை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதேபோல இவருடன் சேர்த்து சப்ரகமுவ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவரையும் பொலிஸார் கைது செய்திருந்தனர்.

இந்த நிலையில் அவரை 5000 ரூபா சரீரப் பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதித்தது.

ஏப்ரல் தாக்குதலுக்குப் பின் காணொளி எடுப்பதும் குழப்பமாக உள்ளமை குறிப்பிடத் தக்கது.