கொழும்பில் யாழ்ப்பாணத்தவருக்கு ஏற்பட்ட பரிதாப நிலை; சம்பவத்தை அறிந்த உறவினர்கள் அதிர்ச்சியில்!

கொழும்பு, பம்பலப்பிட்டி பகுதியில் ரயிலில் மோதுண்டு யாழ்ப்பாணவாசி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்றிரவு (31) இடம்பெற்ற இந்த சம்பவத்தில் யாழ்ப்பாணம், ஊர்காவற்றுறையை சேர்ந்த தம்பையா மகேந்திரன் (65) என்பவரே உயிரிழந்தவராவார்.

மருதானையிலிருந்து தெற்கு களுத்துறை நோக்கி பயணித்த ரயிலே குறித்த நபர் மீது மோதியுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் உயிரிழந்தவரின் சடலம் கொழும்பு போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

குறித்த சடலம், ரயிலின் மூலம் வெள்ளவத்தை புகையிரத நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய, பம்பலப்பிட்டி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.