மதுபோதையில் வகுப்பறையிலேயே மயங்கி விழுந்த ஆசிரியர்.. அதிர்ச்சியில் உறைந்த மாணவர்கள்..!

கிருஷ்ணகிரியில் பள்ளி ஆசிரியர் ஒருவர் மதுபோதையில் பள்ளியிலேயே மயங்கி விழுந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டிணம் அருகேயுள்ள ஒரு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருபவர் செல்வம். இவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி அடிக்கடி பள்ளிக்கு லீவு போடுவதும், அப்படி பள்ளிக்கு வந்தாலும் போதையிலேயே வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், சமீபத்தில் மதுபோதையில் வகுப்பிற்கு வந்த அவர் அப்படியே மயங்கி கீழே சரிந்தார். இதைக்கண்ட மாணவர்களும், சக ஆசிரியர்களும் அதிர்ச்சி அடைந்தனர். ஏற்கனவே அவரின் மது பழக்கம் காரணமாக 6 மாத ஊதிய உயர்வை குறைத்து வட்டார கல்வி அலுவலர் நடிவடிக்கை எடுத்துள்ளார்.

இப்படியிருக்கையில், தற்போது மீண்டும் மதுபோதையில் மயங்கி விழுந்ததால், அவரை தற்காலிக பணியிடை நீக்கம் செய்ய முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.

நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!

Get real time updates directly on you device, subscribe now.

You might also like