குரு பெயர்ச்சி 2019 – 2020 மேஷம், மிதுனம், சிம்மம் – என்ன பலன் தெரியுமா?

குருபகவான் இன்னும் சில மாதங்களில் விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு செல்லவுள்ளார். வாக்கியப்பஞ்சாங்கப்படி அக்டோபர் இறுதியிலும் திருக்கணித பஞ்சாங்கப்படி நவம்பர் 5ஆம் தேதியும் குருப்பெயர்ச்சி நிகழ்கிறது. குரு இருக்கும் இடத்தை விட பார்க்கும் இடங்கள் பலம் பெறும் என்பார்கள். குருவிற்கு ஐந்து, ஏழு, ஒன்பதாம் பார்வை உண்டு. இம்முறை குரு மேஷம், மிதுனம், சிம்மம் ஆகிய ராசிகளை பார்க்கிறார்.

குருவின் பார்வையால் இந்த மூன்று ராசிக்காரர்களுக்கும் என்னென்ன பலன்கள் என்று பார்க்கலாம்.

பொன்னவன் என வர்ணிக்கப்படும் குரு பகவான் ஜாதகத்தில் நல்ல நிலையில் இருந்தால் வாழ்நாள் முழுவதும் கஷ்டம் வராது. குடும்பமும் நல்ல முறையில் இருக்கும். ஜாதகத்தில் குரு ஆட்சி உச்ச நிலையில் இருந்தால் ஜாதகரின் கடைசி காலம் வரை யாரையும் நம்பி வாழ வேண்டிய சூழ்நிலை வராது.

எனவேதான் திருமணம், குழந்தை பாக்கியம், வேலையில் உயர்வு, வருமானத்தில் உயர்வு, நோய் நொடியற்ற வாழ்க்கை வேண்டும் என்று விரும்புபவர்கள் இந்த குரு பெயர்ச்சியை எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர். குரு பகவானின் பார்வையால் பொன்னாக ஜொலிக்கப்போகும் மேஷம், மிதுனம், சிம்மம் ராசிக்காரர்களுக்கு இனி வரப்போகும் ஓராண்டு காலம் ராஜயோக காலமாக அமையப்போகிறது

நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!

அதிர்ஷ்டம் தேடி வரும் உங்கள் ராசிக்கு இனி தடைகள் விலகும் காலம் வந்து விட்டது. குரு உங்கள் ராசிக்கு ஒன்பதாம் வீட்டில் அமர்ந்து உங்கள் ராசியை பார்க்கிறார். கூடவே மூன்று மற்றும் ஐந்தாம் வீட்டையும் பார்வையிடுகிறார். அதிர்ஷ்டமும் நன்மைகளும் தேடி வரப்போகிறது. வருமானம் கூடும். வாழ்வில் புதிய திருப்பம் ஏற்படும்.

ராஜயோக காலம் ஒன்பதாம் வீட்டில் அமரப்போகும் குரு சில மாதங்கள் சனி, கேது உடன் கூட்டணி அமைக்கிறார். தொழில் கிரகம் சனியோடு குரு இணைந்துள்ளதால் பாக்ய குரு நிறைய பாக்யத்தையும் தேடித்தருவார். சுபங்கள் அதிகம் நடைபெறும் காலம். ஓராண்டு காலத்திற்கு ராஜயோகம்தான். கடந்த ஓராண்டு காலமாக கடன்கள் நோய்களை அளித்து வந்த குரு இனி அவற்றை தீர்க்கப்போகிறார்.

குரு பார்வை பலம் இருந்தால்தான் திருமணம் கைகூடும், குழந்தை பாக்கியம் கிடைக்கும். உங்க ராசியை குரு பார்ப்பதால் புத்துணர்ச்சியோடு இருப்பீர்கள். வேலை செய்யும் இடத்தில் மேலதிகாரிகளின் அரவணைப்பு கிடைக்கும். தொழில் வளர்ச்சி அடையும். நட்புகள் தேடி வரும். குடும்பத்தில் இருந்த சண்டை சச்சரவுகள் தீரும். குரு பார்வை மூன்றாம் வீட்டில் விழுகிறது. சகோதர சகோதரிகளுக்கு நன்மைகள் நடக்கும் திருமணம் நடைபெறும்.

ஐந்தாம் வீட்டை குரு பார்ப்பதால் நீண்ட நாட்களாக குழந்தை பாக்கியத்திற்கு காத்திருப்பவர்களுக்கு நன்மைகள் நடைபெறும். மனதிற்கு பிடித்த வாழ்க்கைத்துணை அமையும். சொந்த வீடு கட்டுவீர்கள் சொத்து சுகம் வாங்கும் யோகம் வரும் உயர்பதவியில் உள்ளவர்களுக்கு அதிகார பலம் ஆளுமை புகழ் கீர்த்தியை தரும். உயர்ந்த அந்தஸ்தை தரும். குரு பார்வையால் வேலை இல்லாதவர்களுக்கு வேலையை கொடுப்பார்

குரு பெயர்ச்சியால் மிதுனத்திற்கு ஹம்சயோகம் வரப்போகிறது. மிதுனத்திற்கு குரு பாதகாதிபதியாக இருந்தாலும் ஹம்ச யோகத்தை தருவார் ஏழாம் வீட்டில் குருவும் சனியும் இணைந்திருப்பதால் குடும்பத்தில் கவனம் தேவை. காதல், திருமணம் தொழில் பார்ட்டனர்களிடம் விழிப்புணர்வோடும் கவனத்தோடும் இருப்பது அவசியம். பத்துக்கு பத்தாமிடம். தொழிலுக்கு தொழில் ஸ்தானம், வேலை செய்யும் இடத்தில் பிரச்சினைகள் தீரும். குரு உங்கள் ராசியை தன்னுடைய ஏழாம் பார்வையால் நேரடியாக பார்க்கிறார். திடீர் மாற்றங்களை கொண்டு வரும்.

தொழிலில் லாபம் குரு பார்வை ராசிக்கு மூன்றாமிடத்தில் பதிகிறது. சகோதர சகோதரிகளிடம் இருந்த பிரச்சினைகள் தீரும். சந்தோசங்களையும் ஆதவுகளையும் கொடுப்பார்கள். 11ஆம் இடமான மேஷத்தில் பதிவதால் லாபங்கள் நிறைந்த ஆண்டாக அமையும். அரசியல் அரசாங்கத்தில் இருப்பவர்களுக்கு நன்மையை தரும். வருடம் முழுவதும் வருமானம் நிறைந்த ஆண்டாக அமையும். செய்யும் தொழிலில் லாபத்தை தரும். மாணவர்களுக்கு கல்வியில் மேன்மை உண்டாகும், அறிவித்திறன் அதிகரிக்கும். சனி சிக்கல்களை உருவாக்கினாலும் குருவினால் பாதிப்புகள் குறையும்.

சிம்ம குரு புண்ணிய குரு சிம்மராசிக்காரர்களுக்கு இந்த குரு பெயர்ச்சி புண்ணியங்கள் நிறைந்த ஆண்டாக அமைகிறது. ஐந்துக்கு அதிபன் ஐந்தில் ஆட்சி பெற்று அமர்வது பூர்வ ஜென்ம புண்ணியம் தேடி வரும். குரு உங்க ராசியை ஒன்பதாம் பார்வையாக பார்வையிடுவதால் மனதில் உள்ள எண்ணங்கள் ஆசைகள் நிறைவேறும். நீங்க ஆசைப்பட்டது எல்லாம் நிறைவேறும். குருவின் ஆதரவு அற்புதமாக இருக்கும். பூர்வ ஜென்மத்தில் செய்த புண்ணியங்கள் உங்களுக்கு நன்மை செய்யும்

பதவி உயர்வு தேடி வரும் குழந்தை இல்லையே என்று தவித்தவர்களுக்கு குரு இந்த முறை குழந்தை பாக்கியத்தை கொடுப்பார், திருமணத்தை நடத்தி கொடுப்பார். வெளிநாடு யோகத்தை கொடுப்பார். வேலை உயர்ந்த பதவி உயர்வோடு கூடிய வருமானம் கூடும். பரிபூரண ராஜயோகம் செயல்படப்போகிறது. சனியோடு குரு இணைவது ராஜயோகம். வேலையில் உற்சாகத்தையும் உயரதிகாரிகளின் ஆதரவையும் குரு பெற்றுத்தருவார்.

குரு உங்க லாப ஸ்தானத்தை பார்க்கும் போது வருமானத்தில் லாபத்தை தருவார் நல்ல ஆளுமைத்தன்மையை தருவார். ஆற்றல் வாய்ந்த நேரம். பாக்ய ஸ்தானத்தை குரு பார்வையிடுவதால் அப்பாவின் ஆதரவு கிடைக்கும். புகழும் கீர்த்தியும் தேடி வரும். . சிம்மத்திற்கு 5ல் குரு வந்தால் எதிர்பார்த்ததை விட பலன்கள் தேடி வரும். திருமண வாழ்க்கையில் தோல்வியடைந்தவர்களுக்கு இரண்டாம் திருமண வாய்ப்பும் தேடி வரும்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like