அமெரிக்காவில் உணவகத்துள் புகுந்த ஆயுததாரி வெறியாட்டம் -22 பேர் பலி 40 இற்கும் மேற்பட்டோர் காயம்!

அமெரிக்காவில், பிரபல வால்மாட் கட்டடத்தின் McDonald உணவகத்தினுள் திடீரென நுழைந்த ஆயுததாரி ஒருவர் சரமாரியாக சுட்டதில் இதுவரை சுமார் 22 பேர் உயிரிழந்தும் 40 ற்கும் அதிகமானோர் காயமடைந்தும் உள்ளனர்.

வான்படை மற்றும் தரைப்படை களமிறங்கி நிலமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

ஆயுததாரி என சந்தேகிக்கப்படும் 21 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!

பிடிபட்டுள்ள துப்பாக்கித்தாரியின் பெயர் பேட்ரிக் கிருசிஸ் என்றும் தாக்குதல் நடத்தப்பட்ட இடத்திலிருந்து சுமார் 1,046 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள டல்லாஸ் நகரை சேர்ந்தவர் என்றும் அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.

கண்காணிப்பு ஒளிப்பட கருவியில் பதிவான சில புகைப்படங்கள் வெளிவந்துள்ளன. அதில் அடர் நிற மேலாடையை உடுத்தியுள்ள நபர், கையில் துப்பாக்கியுடன் காணப்படுகிறார்.

டெக்சாஸின் வரலாற்றில் இது மிகவும் மோசமான தினங்களில் ஒன்று” என்று இந்த தாக்குதல் குறித்து அம்மாகாண ஆளுநர் கிரெக் அபாட் கருத்துத் தெரிவித்துள்ளார்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like