காதல் திருமணத்தால் தமிழ் குடும்பம் ஒன்றே அழிந்துபோன கொடுமை?; பெரும் சோகத்தை ஏற்படுத்திய சம்பவம்!

தாய் மற்றும் சகோதரர் தற்கொலை செய்து கொண்ட துக்கம் தாளாமல், இளைஞர் ஒருவர் தனது உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த சம்பவம் தமிழகம் மதுரையில் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் அறியமுடிவதாவது,

கடலூர் மாவட்டம் சிதம்பரம் காரியபெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்த ஆண்டாள் என்பவரின் இளைய மகன் ராஜ் குமார், சொந்தமாக ஆட்டோ வாங்கி ஓட்டி வந்த நிலையில் குடும்ப செலவுக்காக ஊரைச் சுற்றி வட்டிக்கு கடன் வாங்கியதாகக் கூறப்படுகிறது.

நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!

இதனிடையே பல்கலைக்கழகத்தில் படித்த மதுரையைச் சேர்ந்த மாணவியை ராஜ்குமார் காதலித்த நிலையில் அண்மையில் அந்த மாணவியை திருமணம் செய்து கொண்டு ராஜ்குமார் ஊரை விட்டுச் சென்ற நிலையில் அவருக்கு கடன் கொடுத்தவர்கள் ஆண்டாளிடமும் அவரின் சகோதரனான செல்வக்குமாரிடமும் பணம் கேட்டு நிர்பந்தம் செய்துள்ளனர்.

இதனால் நேர்ந்த அவமானம் தாங்காமல், ஆண்டாளும், செல்வக்குமாரும் கடந்த வாரம் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டனர்.

இந்த நிலையில், தாயும் சகோதரரும் உயிரிழந்த துக்கம் தாளாமல், விடுதியில் அறை எடுத்து ராஜ் குமார் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். காதல் மனைவியை பெற்றோரிடமே ஒப்படைத்து விட்டு அவர் சோக முடிவை நாடியுள்ளார் என தெரியவருகிறது.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like