ஹிஸ்புல்லாவை தமிழரின் நடு ஊரிற்குள் கூட்டிச் சென்ற தமிழன் இவரா? வெடித்தது சர்ச்சை..

இலங்கையில் சர்ச்சைக்கு பஞ்சம் என்பதே இல்லாமல் ஆகிவிட்டது. அதிலும் குறிப்பாக அரசியலிலும், அரசியல்வாதிகளின் நடவடிக்கையினாலும் நாளுக்கு நாள் சர்ச்சைகள் ஏற்பட்டுக் கொண்டு தான் இருக்கின்றன.

இந்த நிலையில் தற்போது முகப் புத்தகத்தில் புகைப்படமொன்று காரசாரமான விமர்சனங்களுடன் உலாவிக் கொண்டிருக்கிறது.

அந்த புகைப்படத்தில் இந்து ஆலயமொன்றுக்குள் பாதனியுடன், கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் செல்வது பதிவாகியுள்ளது.

ஆறுமுகத்தான் குடியிருப்பில் உள்ள ஆலயப்பகுதிக்கு விஜயம் செய்த ஹிஸ்புல்லா தனது பாதனியை கழற்றாமல் கோவிலுக்கு உள்ளே உள்ள சாமி முன்பு, ஆலயத்திற்குள் கால் பதித்துள்ளார்.

எனினும் இந்து ஆலயமொன்றை இடித்து அவ்விடத்தை மாட்டிறைச்சி கடையாக மாற்றிய ஹிஸ்புல்லாவுக்கு இது ஒன்றும் பெரிய விடயமல்ல.

என்ன போதிலும் அந்த புகைப்படத்தில் அவர் அருகில் இருப்பவர்கள் யாருக்கும் வாயில்லையா என்ற கேள்வியை எழுப்புகின்றனர் மக்கள்.

ஆறுமுகத்தான் குடியிருப்பில் பெரிய நாட்டு பற்றாளர்கள் போல் கோசமிட்டு கொண்டிருப்பவர்கள் இதனை கவனத்தில் கொள்ளவில்லையா?

அல்லது அடிவருடிகளின் கண்களுக்கு இந்த சம்பவம் புலப்படவேயில்லையா? தேர்தல் காலங்களில் மக்களிடம் ஓட்டு கேட்பது மட்டுமல்ல உங்களின் தொழில்.

சமூகங்களுக்கு, மதங்களுக்கு, கலாச்சாரங்களுக்கு நடக்கும் இவ்வாறான இழிவான செயல்களை தட்டிக் கேட்பதும் உங்கள் கடமையாகும். இப்படிப்பட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு காணுங்கள் இல்லையேல் தேர்தல் காலங்களில் உங்களுக்கு முகநூலில் சங்கு முரசம் வாசிக்கவேண்டி வரும்.

ஹிஸ்புல்லாவிக்கு தெரியவில்லை என்றால் ஆலய நிர்வாகம் என்ன செய்து கொண்டு இருந்தார்கள்? ஏன் அவர்கள் தடுக்கவில்லை? சிறு சிறு தவறுகளை நாம் கண்டு கொள்ளாமல் விட்டு விட்டுத்தான் இன்று நாம் இந்த நிலமையில் உள்ளோம்.

எனவே இனி வரும் காலங்களில் இப்படி பட்ட தவறுகள் இனிமேலும் நடக்கமேல் இருக்க வேண்டும். அதற்கு அந்த ஊர் மக்கள் சரியான இதற்கு சரியான முடிவை எடுக்க வேண்டும். அத்துடன் புதிய நிர்வாக உறுப்பினர்களை தெரிவுசெய்ய வேண்டும்.

அதேபோன்று ஹிஸ்புல்லாஹ்விற்கு கூஜா தூக்கும் செங்கலடி பிரதேசவை தவிசாளரையும் வீட்டிற்கு அனுப்ப வேண்டும். மட்டக்களப்பு தமிழ் இளைஞர்களே சிந்தியுங்கள்.

தேர்தல்கள் வருகிறன. கள்ளப்பணம் வெள்ளப்பணமாக மாறும் காலம். தமிழ் இனமக்கள் பணத்துக்காக சோரம் போய் ஏமாறும் காலம் இது. இனியாவது தமிழர்கள் திருந்த மாட்டார்களா?

என சமூக வலைத்தளங்களில் மக்கள் தமது ஆதங்கங்களை கொட்டித் தீர்த்துள்ளனர்.