ஈழத்தின் வரலாற்றுப் புகழ் மிக்க முருகன் ஆலயத்தில் நேர்ந்த அசம்பாவிதம்

ஈழத்தின் வரலாற்றுப் புகழ் பெற்ற மட்டக்களப்பு மண்முனை தென்மேற்கு தாந்தாமலையில் அமைந்துள்ள ஸ்ரீ முருகன் ஆலயத்தில், கற்கலால் ஆன முகப்பு தோறணை உடைந்து விழுந்துள்ளது.

குறித்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது பலராலும் சின்னக் கதிர்காம் என அழைக்கப்படும் இவ் ஆலயம் கதிர்காமம் செல்ல முடியாத ஆயிரக் கணக்கான பக்தர்கள் கூடும் ஒரு புணித இடம் என்பதும் குறிப்பிடத் தக்கது.

எனினும் இதன்போது தெய்வாதீனமாக யாரிற்கும் எவ்வித உயிர் ஆபத்துகளும் இடம்பெறவில்லையெனவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச் சம்பவம் இடம் பெற்றுள்ளமையால் அப்பகுதி மக்கள் மற்றும் பக்தர்கள் மத்தியில் மிகுந்த கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

காரணம் ஆலயத்தின் முகப்பு தோறணை உடைந்து விழுந்தமையால் எதுவும் அரம்பாவிதங்கள் இடம் பெறலாம் எனும் அச்சம் மக்களிடம் எழுந்துள்ளது.

தீய காரியங்கள் எதுவும் இடம் பெறுவதற்கு முன்னர் இப்படி சில துக்குறிகள் கடந்தகாலங்களில் காட்டியுள்ளதாகவும் அந்தப் பயம் இதிலும் உள்ளதாக கூறப்படுகிறது.