ஆனையிறவு சமரில் விடுதலை புலிகளின் முக்கிய செய்தியை வெளியுலகிற்கு அம்பலப்படுத்தியது எப்படி?

“ஆனையிறவு சமரின் போது, பளையில் இருந்த மக்களை பாதுகாப்பாக வெளியேற்ற வேண்டும் என்ற கோரிக்கையை விடுதலைப் புலிகள் முன்வைத்தனர்.

விடுதலைப் புலிகளின் அரசியல் துறை பொறுப்பாளர் தமிழ்ச் செல்வன் தனக்கு அழைப்பை ஏற்படுத்தி இந்த கோரிக்கையினை முன்வைத்ததாக சிரேஷ்ட ஊடகவியலாளர் வித்தியாதரன் தெரிவித்துள்ளார்.

செய்தி சேவைக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்டிருந்த அவர்,

“விடுதலைப் புலிகள் தன்னை கணிசமாக பயன்படுத்திக்கொண்டனர். ஒரு ஊடகவியலாளர் என்ற வகையில் நான் நெஞ்சுக்கு நீதியாகவே செயற்பட்டேன். யாருக்கும் சார்பாக செயற்படவில்லை.” என அவர் கூறியுள்ளார்.