நல்லுாரான் ஆலய வளாகத்திற்குள் துாக்கு காவடிகள் நுழைய தடை!

வரலாற்று சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த பெரும்திருவிழா இடம்பெற்று வருகின்றது.

இந் நிலையில் ஆலய வளாகத்துக்குள் தூக்குக் காவடிகள் எவையும் பிரவேசிக்க முடியாது என்றும், பருத்தித்துறை வீதியூடாக பிரவேசித்து செட்டித்தெரு வரையிலேயே தூக்குக் காவடிகள் வரமுடியும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அத்துடன் குறித்த இடத்தில் அமைக்கப்பட்டுள்ள சோதனைக்சாவடியுடன் தூக்குக் காவடியுடன் வரும் உழவு இயந்திரங்கள் திருப்பி அனுப்பப்படும் என்றும், ஆலய நிர்வாகமே அறிவித்துள்ளதாக தெரியவருகின்றது.

தேர்திருவிழா, தீர்த்த திருவிழாவின்போது நல்லூரானிற்கு அடியவர்கள் தமது நேர்த்திகளை நிறைவேற்றுவது வழமை.

அந்தவகையில் நல்லூரானிற்கு வரும் தூக்குக் காவடிகள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் வரையிரும் கோயிலின் முன்முகப்பு வரையிலும் அனுமதிக்கப்பட்டு வந்தது.

எனினும் கடந்த 3 ஆண்டுகளாக தெற்கு வாசல் கோபுரம் வரையே காவடிகளிற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

இவ்வாறான நிலையில் இந்த ஆண்டு ஆலயச்சுற்றாடலுக்குள் தூக்குக்காவடிகள் நுழைய தடைவிதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றமை குறிப்பிடத்தக்கது.