வெளிநாடு ஒன்றிற்குள் நுளைந்த இலங்கை தீவிரவாதிகள்! வெளியான அதிர்ச்சித் தகவல்

இலங்கையிலிருந்து இரண்டு தீவிரவாதிகள் பிலிப்பைன்ஸ் நாட்டிற்குள் ஊடுருவியிருப்பதாக அந்நாட்டு அதிகாரிகள் அதிச்சித் தகவல் ஒன்றை இன்று வெளியிட்டுள்ளனர்.

இதன்படி மார்க் கெவில் சம்கூன் மற்றும் விக்டோரியா சோபியா என்கிற பெண் தீவிரவாதியுமே இவ்வாறு பிலிப்பைன்ஸிற்குள் நுழைந்திருப்பதாக அந்நாட்டுத் தலைநகர் மனிலா விமான நிலைய அதிகாரிகள் தகவல் வெளியிட்டிருக்கின்றனர்.

இருவரும் தற்கொலைகுண்டுதாரிகள் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கெவின் என்ற தீவிரவாதியுடைய குடும்பத்தவர்களும் பிலிப்பைன்சில் வாழ்கின்றனர். அவரது தாய் துபாயை சேர்ந்தவர்.

நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!

தற்போது பிலிப்பைன்சில் பணிப்பெண்ணாக தொழில்புரிகின்றார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறித்த பெண் தீவிரவாதி இலங்கை பிலிப்பைன்ஸ் ஆகிய இருநாட்டுக் கடவுச்சீட்டுகளை கொண்டவர் என பிலிப்பைன்ஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பிலிப்பைன்சில் உள்ள பயங்கரவாதிகளிற்கு குண்டுதயாரிப்பது மற்றும் கிறிஸ்தவ தேவாலயங்களைத் தாக்குவது போன்ற விடயங்களில் பயிற்சிகளை வழங்குவதற்காக இவர்கள் பிலிப்பைன்சிற்குள் ஊடுருவியுள்ளனர் என அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

குறித்த பெண் தீவிரவாதி கறுப்பு பட்டியை பெற்ற குண்டு தயாரிப்பில் சிறப்புத் தேர்ச்சியுடையவர் என்றும், அவர் பெண்களுக்கு குண்டுகளை எவ்வாறு தயாரிப்பது பற்றிய கற்றல்களை மேற்கொள்பவர் எனவும் கூறப்படுகின்றது.

இவர் 2018ஆம் ஆண்டு நவம்பரில் பிலிப்பைன்ஸிற்கு சென்றிருப்பதோடு அதன் பின்னரே கெவின் என்ற தீவிரவாதி இந்த வருடம் ஜுன் மாதமளவில் சென்றிருப்பதாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் பிலிப்பைன்ஸில் தற்போது இரட்டைப் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இலங்கையைச் சேர்ந்த பலரும் எகிப்து, சிரியா, ஆப்கான் போன்ற நாடுகளில் தீவிரவாதிகளுடன் இணைந்து போரில் ஈடுபட்டு வருகிறார்கள் என்றும், தற்போது பிலிப்பைன்ஸிலிருந்து தற்கொலைக் குண்டுதாரிகளை தயார்படுத்துவதற்காக குறித்த இரண்டு தீவிரவாதிகளும் ஊடுருவியிருக்கலாம் எனவும் சந்தேகம் முன்வைக்கப்பட்டுள்ளது.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like