பட்டம் பெற்ற மகளிற்கு நடந்த பேரதிர்ச்சியான சம்பவம்! தந்தை

தென்னிலங்கையை உலுக்கிய கோர விபத்தில் பலியான தனது மனைவி மற்றும் மகள் தொடர்பில் பல தகவல்களை வெளியிட்டுள்ளார்.

கடந்த வாரம் இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக்கொண்டமையினால் ஏற்பட்ட விபத்தில் 6 பேர் உயிரிழந்த நிலையில் 50க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

இந்த விபத்தில் 49 வயதான தாய் மற்றும் பல்கலைக்கழகத்தில் கற்கும் மகள் உயிரிழந்துள்ளனர். அவர்கள் அணிந்திருந்த தங்க நகைகள் உட்பட பல பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக தந்தை கண்ணீருடக் தெரிவித்துள்ளார்.

“அதிகாலை 3.45 மணியளவில் மனைவி மற்றும் மகளை பேருந்தில் ஏற்றி விட்டு வீட்டிற்கு வந்து செய்தி பார்க்கும் போதே விபத்து குறித்து அறிந்து கொண்டேன். பிள்ளைகளுக்காக நான் இராணுவத்தில் இருந்து விலகினேன்.

அதற்கு பலனாக மகள் பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகினார். மகள் பட்டம் பெற்ற மகிழ்ச்சியில் இருந்த எங்களுக்கு இந்த மரணம் பேரதிர்ச்சியாக உள்ளது. இந்த துக்கத்தை எப்படி தாங்கிக்கொள்வது.

மகள் படிப்பில் சிறந்தவர். உயிரிந்த மகள் கிராமத்தில் உள்ள பாடசாலை ஒன்றிலேயே கற்றார். 3 ஏ சித்திகளை பெற்று கொழும்பு பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகினார்.

மகள் அவர்களுடன் கற்ற முன்றாம் பிரிவு மாணவனை காதலித்தார். இரண்டு வீட்டாரினதும் அனுமதியுடன் திருமணம் செய்து கொள்ள தயாராக இருந்தார். காதலித்த இளைஞர் உயர் கற்கைக்காக ஜப்பான் சென்றுள்ளார்.

மகளையும் ஜப்பான் அழைத்து செல்வதற்கு அனைத்து ஏற்பாடுகளையும் செய்தார். இந்த வருடம் ஒக்டோபர் மாதம் ஜப்பான் செல்வதற்கு மகள் தயாராக இருந்தார்.

மகளின் ஒரு காலில் வருத்தம் ஒன்று ஏற்பட்டது. அதற்கு சிகிச்சை பெறுவதற்காக அதிகாலை பேருந்தில் மனைவியுடன் சென்றார். அவர்களை பேருந்தில் ஏற்றிவிட்டு வந்து 6 மணியளவில் செய்தி பார்த்தேன். அந்த பேருந்து விபத்துக்குள்ளாகியிருந்தது.

உடனடியாக மகள் மற்றும் மனைவிக்கு அழைப்பை ஏற்படுத்தினேன். இருவரும் பதிலளிக்கவில்லை. களுத்துறையில் இருக்கும் நண்பரை தொடர்புகொண்டு நாகொட வைத்தியசாலைக்கு சென்று பார்க்குமாறு கூறிவிட்டு நான் சென்றேன்.

அங்கு எனது மகள் மற்றும் மனைவியின் சடலத்தையே பார்க்க கிடைத்தது. அதன் போது வைத்தியசாலை ஊழியர் ஒருவர் இருவரதும் சடலங்களில் இருந்த நகைகள் என கூறி என்னிடம் சிறிய பொதி ஒன்றை வழங்கினார்கள்.

அப்போது நான் அதிர்ச்சியில் இருந்தமையினால் அதில் இருப்பதை பார்க்கவில்லை. பின்னர் பார்க்கும் போது அவை தங்கம் அல்ல போலியானதென தெரியவந்தது.

எனினும் யாரிடமும் முறைப்பாடு செய்யவில்லை” என தந்தை கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.