ராஜபக்க்ஷக்களின் பெயர்களை பயன்படுத்தி குடாநாட்டு மக்களிடம் கொள்ளை!

ராஜபக்க்ஷக்களின் பெயர்களை பயன்படுத்தி யாழ்.குடாநாட்டுக்குள் மக்களை ஏமாற்றி கொள்ளையிட ஒருவர் நுழைந்துள்ளதாகவும், அவா் தொடா்பில் விழி ப்பாக இருக்குமாறும் செய்திகள் வெளியாகியுள்ளது.

குறித்த நபர் பசில் ராஜபக்சவின் வட மாகாணத்திற்கான இணைப்பாளர் என கூறிமக்களை ஏமாற்றுவதாகவும் குறிப்பிடபப்ட்டுள்ளது.

அபித்த என்ற பெரும்பான்மை இனத்தை சேர்ந்த நபரே இத்தகைய செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவதாகவும் தெரியவருகிறது.

யாழ். நகர பகுதியில் பாலர் பாடசாலை நடத்தி வரும் குறித்த நவர் வடக்கை மையப்படுத்தி பல வியாபாரங்களில் ஈடுபட்டு வருவதாகவும் கூட்டங்களுக்கு மக்களை அழைக்கும் போது பொருட்கள் தருவதாக கூறி இவர் அழைப்பு விடுப்பதாகவும் தெரியவந்துள்ளது.

இதேவேளை கோத்தபாய ராஜபக்ச ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள சந்தர்ப்பத்தில் இவரால் கோத்தபாயவிற்கு ஆதரவாக பிரசுரிக்கப்பட்ட முதல் பதாதையில் மிரட்டும் தொனியில் வாசகம் எழுதப்பட்டுள்ளதாக அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.

இதனூடாக வடக்கு மக்கள் கோத்தபாயவிற்கு வாக்களித்தால் தான் அங்கு அபிவிருத்தி என்பது போல் அர்த்தம் புலப்படுவதாகவும் அரசியல் அவதானிகள் குறிப்பிட்டுள்ளனர்.

அதேவேளை தமிழ் பேச தெரியாத ஒருவர் பசிலின் வட மாகாணத்திற்கான உண்மையான இணைப்பாளரா? அல்லது அவர்களை வைத்து குறித்த நபர் மக்களிடம் கொள்ளையடிக்கப்போகின்றாரா என்ற குழப்பம் மக்களிடையே எழுந்துள்ளது.

இந்நிலையில் இவ்வாறானவர்கள் தொடர்பில் மக்கள் ஏமாந்துபோகாமல் விழிப்புடன் இருக்குமாறு, சமூக ஆர்வலகள் தெரிவித்துள்ளனர்.