மாற்று வேட்பாளராக போட்டியிடுகின்றாரா ஷிரந்தி? கோத்தபாயவின் நிலை..

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய மாநாடு நடைபெற்று முடிந்துள்ள நிலையில், பல்வேறு சர்ச்சைகள் உருவாகியிருப்பதாக அரசியல் அவதானிகள் கூறியுள்ளனர்.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையில் நேற்று நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் மாநாடு கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.

இதன் போது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைமை பொறுப்பை மகிந்த ராஜபக்ச ஏற்றுக்கொண்டதுடன், அந்த கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக கோத்தபாய ராஜபக்ச அறிவிக்கப்பட்டார்.

இந்நிலையில், குறித்த மாநாட்டில் மகிந்த ராஜபக்சவுடன் அவரது மனைவி ஷிரந்தி ராஜபக்சவும் கலந்துகொண்டிருந்தமை பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளதாக அரசியல் அவதானிகள் கூறியுள்ளனர்.

முன்னதாக ராஜபக்ஷ குடும்ப அரசியல் மீண்டும் தலைதூக்குவதற்கான ஆரம்ப நிகழ்வாக நேற்றைய தேசிய மாநாடு அமைந்ததாக பலரும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்நிலையில், ஷிரந்தி ராஜபக்ச இந்த மாநாட்டில் கலந்துகொண்டிருந்தமை பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளதாக அரசியல் அவதானிகள் கூறியுள்ளனர்.

கோத்தபாய ராஜபக்ச போட்டியிட முடியாது போனால், மாற்று வேட்பாளராக ஷிரந்தி ராஜபக்சவை களமிறக்கும் உத்தியாகவும் இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

முன்னதாக, கோத்தபாய ராஜபக்சவுக்குப் பதிலாக சமல் ராஜபக்சவையே, களமிறக்க வேண்டும் என, பொதுஜன பெரமுனவின் இடதுசாரி பங்காளிக் கட்சிகள் வலியுறுத்தியிருந்தன.

எனினும், அதனை மகிந்த ராஜபக்ச செவிமடுக்கவில்லை. கோத்தபாய ராஜபக்சவையே களமிறக்கியுள்ளார். அத்துடன் தனது மனைவிக்கும் இந்த மாநாட்டில் கூடுதல் முக்கியத்துவம் கொடுத்துள்ளார்.

இது கொழும்பு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த விடயமாக பார்க்கப்படுகிறது என அரசியல் அவதானிகள் கூறியுள்ளனர்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like