நல்லூரானின் வடக்கு வாசல் கோபுரத்தில் தோன்றிய அற்புதம்!

ஈழமணித்திருநாட்டின் வரலாற்று சிறப்புமிக்க அலங்காரக் கந்தனாம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தப்பெருவிழா நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.

நாட்டில் வாழும் அடியவர்களும் புலம்பெயர் தமிழர்களும் நல்லூரானை காண குவிந்துள்ளார்கள்.

எனினும் படையினரின் கெடுபிடிகளையும் தாண்டி மக்கள் அலங்காரக்கந்தனை கண்டு களித்துவருகின்றனர்.

எத்தனையோ இடர்களை தாண்டி தன்னை நாடிவரும் பக்தர்களை கந்தன் கைவிடுவதேயில்லை.

ஏதோ ஒரு வகையில் அவர் பக்தர்களிற்கு அருட்காட்சி கொடுத்தவண்ணமே உள்ளார்.

அந்தவகையில் இந்த படத்தில் உங்கள் கண்ணுக்கு தென்படுவது என்ன?

கோபுரத்திற்கு அண்மையில் தோன்றிய அந்த முகிலை கவனியுங்கள். அந்த உருவம் கோபுரத்தை பார்த்தவாறே உள்ளது.

ஆம் பார்பவர்களை மெய்சிலிர்க்க வைத்த நல்லூர் கந்தனின் தோற்றம் தான் அது.

ஆலயத்தின் வடக்கு வாசல் கோபுரத்துக்கு அண்மையில் ஓர் அடியவரால் எடுக்கப்பட்ட இந்த புகைப்படம் அவரது கைத்தொலைபேசியில் பிடிக்கப்பட்டுள்ளது.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like