தந்தையை போல பல ரகசியங்களை மறைத்த சஜித்- வெளிவந்த உண்மைகள்

சஜித் பிரேமதாசாவின் தந்தையும் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதியுமான ரணசிங்க பிரேமதாச பல மூடநம்பிக்கைகளை அதிகம் நம்புபவர் எமது புலனாய்வு பிரிவு தகவல் தெரிவித்துள்ளது.

அதாவது மாந்திரீகம், ஜோதிடம் போன்றவற்றில் அவர் அதீத நம்பிக்கை உடையவர் என்றும் கூறப்படுகின்றது.

இதன் காரணமாக அவர் ஆட்சியில் இருந்தபோது நாடாளுமன்றத்திலோ அல்லது வேறு எங்காவது செல்லும்போதோ உணவையும் தண்ணீரையும் வீட்டில் இருந்தே எடுத்துச்செல்வாராம். எங்கு எதையும் , யாரிடமும் அவர் வாங்கி உண்ண மாட்டாராம்.

அதுமட்டும் அல்லாமல் ஒருபொழுது அவர் திருகோணமலைக்கு சென்றபோது உணவையும் தண்ணீரையும் விட்டுசென்று விட்டாராம்.

அதன் பின்னர் அங்கு அவர் எதுவுமே அருந்தாமல் கொழும்பிற்கு உலங்குவானூர்தியை அனுப்பி வீட்டில் இருந்து தண்ணீர் மற்றும் உணவை வரவழைத்து உண்டாராம்.

அதேபோல அவர் அடுத்தவர்களை எளிதில் நம்பவும் மாட்டாராம் ரணசிங்க பிரேமதாச.

இதேவேளை தந்தை வழியிலேயே சஜித் பிரேமதாசாவும் மாந்திரீகம், ஜோதிடம் போன்றவற்றில் அதீத நம்பிக்கை உடையவர் எனவும் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் அவர் இளவயதில் தந்தையுடமும், தனது சகோதரியுடனும் எடுத்துக்கொண்ட புகைப்படமொன்று நமது கைக்கு கிடைத்துள்ளது.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like