பெரு நாட்டில் 60 அடி உயர பாலத்தில் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்துக் கொண்ட காதல் ஜோடி நிலைத்தடுமாறி கீழு விழுந்த துயர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெரு நாட்டைச் சேர்ந்த மேபேத்-ஹெக்டார் ஆகிய காதல் ஜோடி, 60 அடி பாலம் ஒன்றின் மேல் நடந்து சென்று கொண்டிருந்தார்கள். அப்போது காதலன் ஹெக்டார், தனது காதலி மேபேத்தை, பாலத்தின் தடுப்பு சுவர் மீதி உட்கார வைத்து முத்தம் கொடுக்க முத்தம் கொடுக்க முயற்சித்தார்.
அப்போது இருவரும் நிலைதடுமாறி, கீழே விழுந்தனர். இதில் மேபேத் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஹெக்டார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.