நான் இனி இப்படிச் செய்ய மாட்டேன்! மஹிந்தவிடம் ஓடிய வியாழேந்திரன் பரபரப்பு வாக்குமூலம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் பற்று பிரதேசத்தில் இருந்து அதிகளவான ஆற்று மண் நாட்டின் பிறபகுதிகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது.

ஆற்று மண் அள்ளுவதற்கான அனுமதிப் பத்திரங்களும் ஏறாவூர் பற்று பிரதேசத்திலேயே மிக அதிகளவு வழங்கப்பட்டுள்ளதாகவும் அறியப்பட்டுள்ளது.

அதுவும் மிக அண்மைக் காலத்தில் அளவுக்கதிகமான மணல் அகழ்வு பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதனால் ஏறாவூர்பற்று பிரதேசத்தின் ஒரு பகுதி இலங்கை வரை படத்தில் இருந்தே காணாமல் போகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் ஒன்றில் கலந்து கொண்ட மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் அவர்கள் வேப்பவெட்டுவான் பிரதேசத்தில் இருந்து அள்ளப்படும் மண் அகழ்வை உடனடியாக நிறுத்தப் போவதாக சூளுரைத்தார்.

நேற்று முன்தினம் மட்டக்களப்பு வைத்தியசாலையில் தேங்கிக் கிடக்கும் கழிவுகளை வேப்பவெட்டுவன் பிரதேசத்தில் உள்ள அரச காணி ஒன்றில் புதைப்பதுக்கு வைத்தியசாலை அதிகாரிகள் எடுத்த முயற்சி பொது மக்களால் தடுக்கப்பட்டது.

இதன்போது சமுகமளித்த பாராளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் அவர்களிடம் பொது மக்கள் மண் அள்ளப்படும் விடயம் தொடர்பாக முறையிட்ட போது, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டவுடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து மண் அகழ்வை முற்றிலும் நிறுத்தப் போவதாக கூறி பல ஆர்ப்பாட்டங்களை செய்ததோடு தேசிய கனிம வள அலுவலகத்தினையும் முற்றுகை இட்டிருந்தார்.

எனினும் பிற்பட்ட காலத்தில் அவர் மண் விடயத்தில் வாய் திறக்காமல் இருந்தோடு, இவர் அபிவிருத்தி இணைத் தலைவராகவிருக்கும் ஏறாவூர் பற்று பிரதேசத்தில் அதிகளவான மண் அள்ளும் அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்பட்டு மண் ஆயிரக்கணக்கான லொறிகளில் தினமும் மண் கடத்தப் படுகிறது.

மேலும் பாராளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன், பல பினாமிகளின் பெயர்களில் மண் அள்ளும் அனுமதிப் பத்திரங்களை பெற்றுள்ளதாக முக நூல்களில் செய்தி வெளியிடப்பட்டதோடுஅவ்வாறு அனுமதிபத்திரம் பெற்ற பாராளுமன்ற உறுப்பினரின் உதவியாளர்களின் பட்டியல்களும் பிரசுரிக்கப்பட்டிருந்தன.

எவ்வாறு இருப்பினும் வேப்பவேட்டுவானில் அவர் உறுதியளித்தவாறு மண் ஏற்றப்படுவதை நிறுத்துவாரா என்பதை மக்கள் அவதானித்துக் கொண்டு இருக்கிறார்கள்.